பக்கம்:இலக்கியச்சுவை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

________________

13 திட்டத்தோடு வாழ்வு இயங்கும் பொழுதுதான் இன்ப வாழ்வு ழுழுமலர்ச்சி அடைய முடியும் என்ற சீரிய உண்மை யைக் கம்பநாடன் நமக்குக் காட்டுகிறான். சிந்தித்தேன், மேலும் சிந்தித்தேன். மென்மேலும் சிந்தித்தேன். 'என்றுமுள்ள தென்றமிழ்' இயம்பிய கம்பன் என்றுமுள்ள சமுதாய வாழ்வுக்கான உண்மையை எவ்வாறு அழகு எனும் அழகுமோர் அழகுபெற எடுத்துக் காட்டு கிறான் என்பதை வளரும் தமிழினம் சிந்திக்க வேண்டு கிறேன். அடுத்தாற்போன்று, வழக்கமான உணர்வோடு என் சிந்தனை, பாரதி இலக்கியத்தை நோக்கிப் பாய்ந்தது. "பாரதி செந்தமிழை வாழ்த்துகிறான். செந்தமிழ் நாட்டுப் பெருமக்களை வாழ்த்துகிறான். இந்நாள்எம்மைப் பிடித்து ஆட்டி அலைக்கும் இன்னல்களும் GOLD களும் தீய சக்திகளும் ஒழிய வேண்டும் என்கிறான். தருமம் தழைக்க வேண்டும் என்றும் முழங்குகிறான், அனை திந்திய மக்கள் ஆண்மையோடு இயற்றும் அரும் பெரும் முயற்சிகள் அனைத்தும் வெற்றிமேல் வெற்றி புனைந்து நம் நாட்டின் நல்வாழ்வு நாள்தோறும் உயர வேண்டும். என்று வாழ்த்துகிறான். தோ பாடல்: "வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க! நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக! அறம் வளர்ந்திடுக! மறம்மடி வுறுக! ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும் சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக! நந்தேசத்தினர் நாடொறும் உயர்க! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/17&oldid=1480285" இலிருந்து மீள்விக்கப்பட்டது