பக்கம்:இலக்கியச் சாறு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

வ.சுப. மாணிக்கனார்



இன்றியமையாதவள் என்பதனை விளம்புகின்றான். அவனது ஆர்வமொழியெல்லாம்கேட்டபின்,தோழிநின்குறையைநீயே சென்று தலைவிக்குச் சொல் என்று தன் பொறுப்பின்றிச் சொல்கின்றாள். இப்பேச்சால் தலைவன் கசந்தான்; சிறிது சினந்தாள்.'நின்மனத்தை என்சொல்லால் மாற்ற இயலாது.ஒரு புல்லைத் தோணியாகக் கொண்டு கடலை நீந்த முடியுமா? கல்லைப்பிசைந்து கனியாக்கவல்ல திருவெங்கைச் சிவனே உன் மனத்தை இளக்க வல்லவன்’ என்று தலைவன் தோழியின் வன்னெஞ்சத்தைத் தாக்கினான். பாட்டுடைத் தலைவனாம் வெங்கைநாதன் துறைப் பொருளுக்கு உள்ளாதல் காண்க கோவைப்புலவர்களின் தனித்தன்மை -

ஆசிரியம் வெண்பா கலித்துறை என்ற யாப்பிலும், செய்யுள் எண்ணிக்கையிலும், ஒரு துறைச் செய்யுட்களிலும், துறைவகையிலும், கூற்றிலும், முடிபிலும், தலைவர் நிலையிலும் கோவை நூல்களிடை வேறுபாடுகள் உள என்பதனை மேலே சுட்டிக்காட்டினேன்.கோவைப் புலவர்கள் பாட்டியல் இலக்கண நூல்களுக்கு அடிமைப் படவில்லை என்று இதனால் அறியலாம். இலக்கியம் கண்டு அதற்கேற்பக் கோவையிலக்கணம் எழுதப்படவில்லை என்று மேலும் அறியலாம். கோவை தோறும் வேறுபாடு இருத்தலின் ஒரு கோவை மற்றொரு கோவைக்கு முற்றும் அடிச்சுவடாக்வில்லை என்பதும் அறியத்தகும்.கோவைப்புலவர் ஒவ்வொருவரிடமும் சில தனிப்புலமைகள் காணப்படுகின்றன. கலித்துறைக் கோவைகளுள்ளும் நடைநயங்கள் வேறுபடுகின்றன. தமக்கெனச் சில புதிய கருத்துக்களும் யாப்பமைதியும் பெற்றமையாற்றான் ஆளுக்கு ஒரு கோவை பாடத் தொடங்கினர். இடம் அணித்து என்றல்’ என்னும் ஒரு துறையில் கோவைப் புலவர்களின் வேறுபட்ட சிந்தனைகளை ஒப்பிட்டுக் காணலாம். தலைவன் தலைவியை முதல் நாள் கண்டுபிரியும்போது, தலைவி கவல்கின்றாள். 'கவலாதே, உன் ஊரும் என் ஊரும் மிகப்பக்கம்; போவதும் வருவதும் எளிது’ என்று தலைவன் ஆறுதல் செய்தல் இத்துறையின் பொருளாகும். இவ்வொரு துறைக்கண்ணே ஒவ்வொரு