பக்கம்:இலக்கியச் சாறு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

121



புலவரும் காட்டிய சிந்தனையோட்டம் நுண்ணியது, இனியது, சிறந்தது.

திருவாரூர்க் கோவைத் தலைவன் 'நம் இருவர் ஊர்க்கும் நடுவே எல்லைக்கல் உள்ளது. இந்த எல்லைக்கல் இன்றேல், இரண்டு ஊரார்க்கும் எல்லைச் சண்டை ஏற்படும்’ என்று மொழிகின்றான். கலைசைக் கோவைத் தலைவன் என்னுரர் ஆடு மாடுகள் நின்னூர் மலைக்கு வந்து தினை மேய்ந்து திரும்புகின்றன என்று கூறுகின்றான். சிராமலைக் கோவைத்தலைவன் என்னுரர் மிளகுக்கொடி உன்னூர்ச் சோலையில் படர்கின்றது” என்று கட்டுகின்றான். திருவாவடுதுறைக் கோவைத் தலைவன் என்னுரர் இஞ்சிக்கொடி நின்னூருக்கு நிழல்தரும் என்று இயம்புகின்றான்.திருக்கோவைத் தலைவன்"என்னுர் மாளிகை வெண்சாந்தின் ஒளி நின்னூரின் கருங்குன்றத்தை வெண்குன்றமாக்கும் என்று உரைக்கின்றான். திருவெங்கைக் கோவைத் தலைவன் ‘இறைவன் திருமேனியும் அம்மை திருமேனியும் ஒன்றாய் இருப்பது போல நம்மிருவர் ஊரும் ஒன்றே என்று கூறுகின்றான். தஞ்சைவாணன் கோவைத் தலைவன்"என் ஊர் வேங்கைமரம் நின்னூரின்காந்தட்கையில் பொன் சொரியும் என்று பேசுகின்றான். மதுரைக்கோவைத் தலைவன் நின் காதுக்கும் விழிக்கும் எவ்வளவு தொலை’ என்று வினவுகின்றான். வியாசக் கோவைத்தலைவன் என்னுரர்க் கருமணிச் சோதியைக் கண்டு முகிலென்று மயங்கி நின்னூர் மயிலாடும்’ என்று காட்டுகின்றான். குளத்துர்க் கோவைத் தலைவன் வேதநாயகவள்ளலின் பொருட்கும் வறியோர்க்கும் நெடுந்தொலைவா’ என்று கேட்கிறான். ஒரு பழங்கோவைத் தலைவன் நின்னுடைய கூந்தல் நிறத்தால் நிறைவளையாய் என்னுடைய ஊரும் இருளாகும்’ என்று முடிக்கின்றான். கோவையின் சொல்லாக்கம்

கோவைப் பொருளாராய்ச்சி, கோவைச் சொல்லராய்ச்சி, கோவை நடையாராய்ச்சி என்ற வகையால் கோவைத் திறன்களை ஆராய்ந்து விளக்கிப் பரப்புதல் நல்லது.கோவைச் சான்றோர்களின் புலமைத் தனிக்கூறுகளை மேலே ஒரு