பக்கம்:இலக்கியச் சாறு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

வ.சுப. மாணிக்கனார்



விருத்தங்கள், கலிவிருத்தம், கட்டளைக் கலித்துறை, வஞ்சித்தாழிசை, வஞ்சிவிருத்தம், காவடிச் சிந்து, கண்ணி என்றவாறு பாவும் பாவினமும் கலந்த பல்வேறுயாப்பின.பிரிவு 38 என்றாலும் அனைத்தும் காந்தி என்னும் ஒரு பொருளை நுதலி எழுந்தனவே. ஒரு பொருளைப் புலவன் நேராகவும் பாடுவன், உள்ளாகவும் பாடுவன்.நேர்முகமாகப் பாடின், பாடற்பொருள் எனப்படும்; உள்முகமாகப் பாடின் வைப்புப்பொருள் எனப்படும். பாடல் பெற்ற தலம் எனவும் வைப்புத்தலம் எனவும் பாகுபடுத்தும் முறையை ஒப்புநோக்குக பிள்ளைத்தமிழ், நான்மணிமாலை, திருப்பள்ளியெழுச்சி, திருத்தசாங்கம்,திருப்பல்லாண்டு என்றின்னபகுதிகளில் காந்தி பாடற்பொருளாக விளங்குகின்றார். காந்தியந்தாதி,காதல் மறுமணம், தாலாட்டு, தோழி பேச்சு என்றின்ன பகுதிகளில் வைப்புப் பொருளாக்த் திகழ்கின்றார்.

மயிலே மணியே மணமே மருந்தே மனத்தில்வளர் குயிலே கொடியே குணமே கொழுந்தே குழலொடுயாழ் பயிலின் மொழியே விழிதிற வாயெனில் பாவியெதும் அயிலேன் இதுமெய் அருங்காந்தி ஆணை அறிகுவையே (133)

இது காந்தியந்தாதிக்கண் நாணிக் கண்புதைத்தல் என்ற துறையில் வருஞ் செய்யுள். நாணத்தால் கண்பொத்திக் கொண்ட காதலியை நோக்கி, “நீ எனைப் பார்க்கக் கண்திறவாவிட்டால் பட்டினி கிடப்பேன். காந்திமேல் ஆணை’ என்றான் காதலன். இப்பாவில் காந்தி வைப்புப் பொருளாவர். தாலாட்டுப் பகுதியில், காந்தி 'அறமதனைக் காசினியெலாம் பரப்ப்ப் போந்த இளங்கொடியே எனவும், இராசன்பாபு வரவேற்புரையில், நடுவுயர் காந்தி நன்மணிப் பாங்கர் வடுவிலாது ஒளிரும் வயிரமாமணியே’ எனவும் பாடுங்கால், காந்தி வைப்புப்பொருள்படுகின்றார். தலம் எதுவாயினும் பலவாயினும் ஒரிறைவன் உறைகின்றான். அதுபோல்தலைப்புஎதுவாயினும்பலவாயினும் ஒரு காந்தியே எங்கும் பொருளாகின்றார். -

இராய.சொ. எத்தகைய மனநிலையில் காந்திக் கவிதைகளைப்பாடுகின்றார்? தமக்கும் காந்திக்கும் என்ன உறவு