பக்கம்:இலக்கியச் சாறு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

வ.சுப. மாணிக்கனார்



தண்ணளிசேர் காந்தி பாதம் தலைக்கொள்ளும் நற்காரை நகர் ராய சொக்கலிங்கன் (18) என்று தாள்தலை உறவு குறிப்பர். 'நாயேனை நஞ்சாம் உலகத் தீநெறி அதனுள் நண்ணாது ஆட்கொண்ட சீல’ (12) என்று மாணிக்கவாசகரின் தாழ்வு நடையில் நாயேனை என்று பணிவு மொழிகுவர். தெய்வப் பாசுரம்

தெய்வப் பாசுரம் பாடிப்பாடிப் பாசுர இலக்கியத்தின் எல்லை கண்டது தமிழ் ஆதலின் எத்தெய்வத்தை யார் பாடினாலும் பழம் பாசுர அமைப்பின் படிவமாகத்தான் இருக்க முடியும். போரார் திறம்பாடிப் பொன்னூசல் ஆடாமோ (189) என்பது திருவாசகத்தடம். 'பாரதர் முடிமணிக் காந்தியடிகட்குப் பல்லாண்டு கூறுதுமே (192) என்பது சேந்தனார் பெரியாழ்வார்தம் திருப்பல்லாண்டுச் சாயல்; காந்தி திருமுன் குவியாக் கையென்ன கையே. கழலிணைகள் பற்றாத கையென்ன கையே (200) என்பது சிலப்பதிகாரநெறி. “எக்குறியும் திருநெற்றி இடாதான் கண்டாய், ஏர்வாடாக்கோவிலுறை எம்மான்தானே (206), பொன்னாரும் திருமேனி பொலிந்து தோன்றும், பூவிலுயர் சபர்மதி எம் புனிதனார்க்கே’ (208) என்பன திருத்தாண்டக வழி. இவ்வண்ணம் அடிகள் இராய சொ. புதிய காந்திக் கடவுளைத் திருப்பொன்னுரசல், திருப்பல்லாண்டு, திருப்புகழ், திருத்தசாங்கம் என்றின்ன தெய்வத் தலைப்புக்களில் நெக்கு நெக்குப் போற்றுவர்.

தடம் பழைமை என்றாலும் காந்திக் கவிதையின் உணர்ச்சிகளும் கொள்கைகளும் புதுவேகம் உடையன. புதிய முறை என்று பேரிட்டு ஒய்ந்த கருத்துக்களைப் பாடுவார் பல்கிய இந்நாளில், மரபான முறையில் தரமான நடையில் காந்தியின் புரட்சியங்களைப் பாடியுள்ளார் இராய.சொ. தெய்வப் பாசுரமாயினும் “கைம்மையை உடைத்திடுவேன்' என மாதர் மறுமணம் கமழ்கின்றது; எங்ஙனம் பெண்மை இழிவாகும் என மன்பதைத்திருத்தம் வலியறுத்தப்படுகின்றது: 'இந்தியா எழுந்துவிட்டது என நாட்டுப் பற்று எழுப்பப்