பக்கம்:இலக்கியச் சாறு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு 151

படுகின்றது; வையகத்தில் எல்லோரும்பசியாமல் உண்டு உடுத்தி வாழவேண்டும் எனப் பொதுவாழ்வியம் வேண்டப் படுகின்றது; எனக்குத் தமிழ் வராது என்றுரைப்பவர்தம் மன நிலை பழிக்கப்படுகின்றது. இவை யெல்லாம் காந்திப் பாசுரத்தின் புதுக்கூறுகள். காந்தி மக்கள் தலைவராதலின், பொது மக்களின் நல்வாழ்வுக்கு வேண்டிய மக்களியம் காந்திக் கவிதை முழுதும் இலங்கக் காண்கின்றோம்.

சிறியதொரு கத்தர்ப்பை பக்கம் தோன்றும்

தினம்படிக்கும் ஒருகீதை அதனுள் தோன்றும் மறையெழுதும் ஒருசிறிய குச்சி தோன்றும்

வனப்புயர்ந்த இராட்டொன்று திருமுன் தோன்றும் கறையெதுவும் இல்லாத கத்தர் மாலைக் 丁 *

கயிற்றுடனே கடிகாரம் ஒன்று தோன்றும் பொறியடக்கி ஆண்டபெருந் தகைமை தோன்றும்

பூவிலுயர் சபர்மதியெம் புனித னார்க்கே. (200) தெய்வக் காந்தியின் திருவுருவத் தோற்றம் புனையப்படும் இச் செ ய்யுளில் எவ்வளவு புதுக் கருத்துக்களும் காலப்புதுச் சொற்களும் தொக்குக் கிடக்கின்றன! சிறைக்களம்

பாடும் புலவனின் சூழ்நிலையைப் பொறுத்துப்பாட்டுக்கு உணர்ச்சி அமையும். இடத்துக்கு உணர்ச்சிக்கும் இயைபு உண்டு. மேடைமேல் ஏறிப்பேசும் உணர்ச்சி பாயின்மேல் இருக்கும்போது தோன்றாது.காந்திக்கவிதையின் பலபகுதிகள் இராய.சொ. வேலூர்ச்சிறையில் வீற்றிருந்தகாலை பாடியவை. 'சிறை காக்கும் காப்பு எவ்ன் செய்யும்’ என்று வினவுவர் வள்ளுவர். சிறைக்காப்பு தமிழ்செய்யும்’ என்று விடை சொல்லத் தோன்றுகிறது.38 பகுதிகளில் 31வேலூர்ச் சிறையில் ஓராண்டில் யாத்தவை.

கறையுடையார் தமக்காகக் காணப்பட்ட

காவலமை வறட்டுமலை சூழ்ந்த வேலூர்ச் சிறையதனில் சிற்றறையில் இருந்து ராய

சொக்கலிங்கன் இப்பதிகம் சொல்லல் உண்டோ (219)