பக்கம்:இலக்கியச் சாறு.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. பாடுவார் பாட்டாண்மை

'பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்” என்றார் சுந்தரர். பரமனையே பாடுவார்தம் பெருமை பாடுவோம்’ என்றுபோற்றினார் சேக்கிழார். இங்ஙனம் இருபேரடியார் புகழ்ந்துரைத்த பாடுவார்’ என்ற பெயரைப் பட்டப் பெயராகப் பெற்றவர் யார்? பெருந்துறவி பட்டினத்தாரின் குலத் துதித்த பாடுவார் முத்தப்ப செட்டியார் ஆவர். முத்தப்பரை நிறைமொழி மாந்தராகவும் காண்கின்றோம். வாழ்க என்றாலும் கெடுக என்றாலும் எவருடைய சொல் உடனே பலிக்குமோ அதுவே நிறைமொழி' யாகும் என்று பரிமேலழகர் விளக்கியுள்ளார்.இப்பலித நிகழ்ச்சிகள் பலவற்றை 19 ஆம் நூற்றாண்டில் கீழைச் சேவற்பட்டியில் வாழ்ந்த முத்தப்பர் வாழ்க்கை வெளிப்படுத்துகின்றது.

மாமரத்தைவிட்டுக் கிளை முரிந்து வீழ்ந்தது, ஆயக்காரன் இல்லம் அடியோ எரிந்தது, அரியக்குடியார் பெருகாமல் ஒரளவாக இருப் பது, நாகூர்ச் சிறுவர்கள் மயங்கி வீழ்ந்தது, மூத்தமகன் சருக்கரைக்கருப்பையாபலிதம் இழந்தது என்ற தீய விளைவுகள் பாடுவார்வாக்கால் விளைந்தன.சங்ககால முதலே அறம் பாடுதல் என்ற கவி வழக்கு உண்டு. பெரும்பாலும் இஃது அழிவையே சுட்டும். இடைக்காலப் புலவர்கள் வரலாற்றில் வசை பாடிய செயல்கள் சுவையாகக் காணப்படுகின்றன. கருநாக்கு என்று சிலரை வழக்கிற்கூடநாம் குறிக்கவில்லையா? எனவே 'பாடுவார்’ என்பது அறம் பாடுவார் என்ற அச்சக் குறிப்புடையது. முத்தப்பர் வாழ்க்கையையும் வாக்கையும் நினைக்கும்போது, பொதுமக்கட்குப் பட்ட எண்ணம் இது.

பாடுவார் முத்தப்பர்நினைவுமலர்-14-11.1985.