பக்கம்:இலக்கியச் சாறு.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு 179

முன்னே பாஞ்சாலர் முடிவேந்தன் ஆவிமகள் இன்னே நாஞ்சூதில் எடுத்த விலைமகள்

என்ற தொடரில், துரியோதனன் திரெளபதியை விலை மகள்' என்று காரணப்ப்ெயராகக் குறிக்கின்றான். என்றாலும்,அவள் ஒர் பரத்தை என அவன் கருதும் இழிவுக் குறிப்பும் அச் சொல்லில் அடங்கியுளதன்றோ?

- பெருமிதம் வாயாதவன் புலவன் ஆகான். அவன் சொல்லும் சொற்கள் மக்கள் செவியில் ஏறா. தமிழ் நாட்டிற் பிறந்த புலவர்களுள் சிறந்த பெருமிதத்தவர் பாரதியார். “மன்னரையும் பொய்ஞ்ஞான மதக்குரவர் தங்களையும் வணங்கலாதேன்’ என்று அவர் கூறும் நெடுமொழிப்பாட்டை உள்ளுக. 'பெறுமவற்றுள்யாமறிவதில்லை (61), 'யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை” (300) அவரன்ன ஒப்பாரி யாம் கண்டதில் (1071) எனத்தாம் கண்ட மூன்று துணிவுகளைக் கூறவந்த வள்ளுவர், யான் என்னாது ‘யாம் என்ற தன்மைப் பன்மை நடையில் மொழியக் காண்கின்றோம். இந்நடையே துணிவுப் பொருள் வெளியீட்டிற்கு ஏற்றது என்ற கண்ட பாரதியார்-குறள் கற்ற பாரதியார் ‘யாமறிந்த மொழிகளிலே’, ‘யாமறிந்த புலவரிலே’ எனச் சொல்லாட்சி செய்துள்ளார். பாரதியார் வேறிடங்களில் இங்ஙன் ஆட்சி செய்ததாக அறியப்படவில்லை. *

கம்பன் பிறந்தது, உலகிற்கு வள்ளுவனைத் தந்தது, சிலப்பதிகாரம் படைத்தது,வேதம் நிறைந்தது,வீரஞ்செறிந்தது, காதற் கன்னியர் சூழ்ந்தது,புவிச்செல்வம்அத்தனையும்பெற்றது, தமிழ்மொழிவழங்குவது எனப்பல சிறப்புஉடைய தமிழகத்தை எப்படிக்குறிப்பது நிறைந்தது,நிரம்பியது.விரிந்தது,தொக்கது, குழுமியது, பரந்தது என்றெல்லாம் சொல்லினால் உள்ளக் கருத்துப் பதியுமா? புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு’. என்றார் பாரதி. காடு மண்டிக் கிடத்தல் என்ற வழக்குத் தொடரைச் சிறிது மாற்றியமைத்து உள்ளங் கவர்ந்தார். 'குமரி யெல்லை வடமாலவன் குன்றம் இவற்றிடையே’என்று வரம்பு. கூறியதனால் இவ்வெல்லைக்கு வெளியுலகத்திலே புகழ் இவ்வளவு மண்டிக் கிடக்கவில்லை என்றும், பரவலாகவே காணப்படும் என்றும் குறிப்புக் காட்டினார்.