பக்கம்:இலக்கியச் சாறு.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு 183

மோகத்தைக் கொன்று விடு, அல்லால் என்தன்மூச்சைநிறுத்தி விடு' என்பது நெறிநடை 'சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ என்பது இசை நடை

வில்லினையெடடா-கையில் வில்லினையெடடா-அந்தப் புல்லியர்கூட்டத்தைப்பூழ்திசெய்திடடா - ஒரு சொல்லையே அடுக்கிச் சொல்லியும், அடுத்துச் சொல்லியும் புலவன் கருத்துக்கு வேகம் ஏற்றுகின்றான். போரடா பொருதியாயிற் புறப்படு புறப்படென்றான்’ என இரணியன் கூற்றாகக் கம்பர் நடைதொடுப்பர்.

கழற்றிடக் கழற்றிடத் துணி புதிதாய் வண்ணப் பொற் சேலைகளாம்-அவை வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே பாலருந்து மதலையர் தம்மையே

பாத கக்கொடும் பாதகப் பாதகர் மூலத் தோடுகு லங்கெடல் நாடிய

மூட மூடநிர் மூடப் புலையர்தாம் உரிய உரியத் திரெளபதியின் துகில் கண்ணபிரான் அருளால் வளர்ந்துகொண்டே சென்றதை, வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே என்று ஒரு சொல்லை மும்முறை அடுக்கி, விரையும் துணிவும்படப் பாரதியார் சுட்டுகின்றார். தட்டுத் தடையின்றித்துகில் ஒழுங்காக வளர்ந்தது என்பதனை, ஏற்ற விறக்க மின்றி ஒரு சீராக வரும் (குற்றொலியாகவே வரும்) ஒலி நயத்தாலும் உணர முடிகின்றது. பிள்ளை மணஞ்செய்யும் கொடியவர்களை, பாதகக் கொடும் பாதகப் பாதகர், மூடமூட நிர்மூடப் புலையர்' என்று வசைக் சொற்களைத் தொடுத்துக் கூறுதல் காண்க.அடுக்கு நடையைப் புலவன் அசிதாகவே கையாளவேண்டும். நீளக் கையாண்டால் படிப்பவர்க்கு உணர்ச்சி பிறக்காது. ஆசிரியன்மேல் நகைப்பே பிறக்கும். நடைக்குறிப்பு - - -

புலவன் சொற்களை வைக்கோல்போல் ஏற்றும் வண்டிக்காரன் அல்லன், பீ பீ ஊதிக்கொண்டு செல்லும் தெருவூதியல்லன், ஒத்த நடையிடும் படையாளன் அல்லன்.