பக்கம்:இலக்கியச் சாறு.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. பாரதியின் பழமை

பழமை பழமை யென்று

பாவனை பேசலன்றிப்

பழமை யிருந்தநிலை- கிளியே

பாமரர் ஏதறிவார் - பாரதி

தொல்காப்பியம் முதல் பாரதீயம் இறுவாய்த் தமிழ்ப்

பெருநூல்கள் பழமைப் பற்றுடையனவாகவே காணப் படுகின்றன:ஆலம்வீழ்துபோலப்பழமையிலிருந்து தோன்றிப் பழமையைக் காப்பனவாகவே விளங்குகின்றன. இலக்கியம் என்பது மக்க்ளினம் தோன்றியவுடன் தோன்றியதன்று; மொழியோடு உடன் பிறந்தததுமன்று. மக்கள் பல்லாயிரம் ஆண்டு வாழ்ந்தபின் பிறந்ததுமொழி. மொழி பல்லாயிரம் ஆண்டு வளர்ந்தபின் எழுந்தது இலக்கியம். இலக்கியம் எழுதப்பட்ட காலத்து மன்னாயம் தொன்று முதிர் பழமையை எய்திவிட்டது; மக்கள் நினைவோட்டம் தடம் பட்டுவிட்டது; மொழிக் கருவியின்றி நினைக்கும் தனியாற்றலை மக்கள் நெஞ்சம் இழந்துவிட்டது. சொற்களும் சொற்றொடர்களும் மரபாகி விட்டன. ஆதலின், ஒரு நாட்டின் ஓரினத்தின் ஒரு மொழியின் முதலிலக்கியங்கூடக் கன்றிய வழக்கின் அடிப்படைமேல் எழுந்ததுவே என்று தெளிக, முதலெழுந்த இலக்கியங்களின் பிறப்புநிலை இதுவாயின், பின்னெழுந்த இலக்கியங்களைப் பற்றிச் சொல்வானேன்? அவற்றுக்குப் பழைய வழக்கு மாத்திரம் அடிப்புடையன்று: பழைய இலக்கிய மரபும் அடிப்படையாம். வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் தோன்றியதெனத் தொல்காப்பியத்திற்கேமூவாயிரம் ஆண்டு எய்திய கிழப்பனுவலுக்கே-சொல்லப் படுமேல், தமிழில் இன்று எழுகின்றன நூல்களுக்குத் தனிப்புதுமை எங்கு வரும்? புதுக்கியவற்றையே புதுமை யென்று நாம் பாராட்டுகின்றோம். மரபியல் என ஓரியல்