பக்கம்:இலக்கியச் சாறு.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு • 195

மேற்கோட்பதிப்பு வேண்டும் என்று முன்னர் ஒரு கருத்து வெளியிட்டேன். பல இடங்கட்கு முந்து நூல்களிலிருந்து ஒப்புமைகள் காட்ட முடியும் ஒப்புமை காணமுடியாப் பல புது நுண் கூறுகளும் பாரதி கவிதையில் உள. ஆதலின், புதுமைப் புலவன் சொல்லிய அனைத்திற்கும் விடாது மேற்கோள் காண அலைய வேண்டா.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கு மஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கு மிருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம் பெண்ணினத்துக்கு வேண்டும் ஆண்மைகளைப் புதுமெய்ப் பாட்டோடு எடுத்துரைக்கின்றார் பாரதியார். உலகில் மன்குலம் பல மாறுதல் அடைந்துவிட்டது. இந்நிலையில் பழம்போக்கு பெண்ணுக்குக் கூடாது; நாணமும் அச்சமும் மக்களினத்துக்கே கூடா என்று தெளிந்த புலவர் மேற்கண்டவாறு புதுப்பெண்மை வேண்டுகின்றார். கருத்துரிமை

இலக்கியத்துக்கு ஒரு புது நோக்கை இந்நூற்றாண்டில் வகுத்துக் கொடுத்த புதுத் தொல்காப்பியர் பாரதியார் ஆவார். அரசு மக்களரசாகி வரும் காலத்து இலக்கியமும் மக்களிலக்கியமாக உருவாக வேண்டும் என்றும், மொழிநடை எல்லோர்க்கும் பொருள் விளங்கும்படி நெகிழ வேண்டும் என்றும், ஒலி நடை யாரையும் ஈர்க்குமாறு இசையவேண்டும் என்றும்,இவ்வெல்லாம் கவிதைத்தன்மை சிறிதும்குன்றாவாறு அமைய வேண்டும் என்றும் பாரதியார் பாடல் நமக்குத் கற்பிக்கிறது. உலகத்து நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் எத்துணைப் பெரியவன் செய்திருப்பினும், உரசி அலசிப் பார்த்து மக்கள் தம் கருத்துரைக்கும் மனவளர்ச்சியை இன்று காண்கின்றோம். அங்ஙனம் யாரும் தத்தம் கருத்தை வெளியிடும் உரிமைக் காலம் இது. இந்நாளைப் புலவனும் பாத்திரங்களின் செயல்களை அழகுபடச் சொல்லுவதோடு அமையாமல், அச்செயல்களைப் பற்றித் தான் கருதும் கருத்தையும் இடையிடையே சொல்லிப் போக வேண்டுமன்றோ? கருத்துரிமை சான்ற கலத்து, அவ்வுரிமை