பக்கம்:இலக்கியச் சாறு.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு - 197

என்று புலவன்தன் முக்காலப்புலமைத் திறத்தைக் குறிப்பிடுவர் தொல்காப்பியர்.தமிழ்ப்புலவர்களுக்குள்ளே இத்தொல்காப்பிய இலக்கணத்திற்குப் பேரிலக்கியமாக விளங்குபவர் பாரதியாரே.

ஆடுவோமே-பள்ளுப் பாடுவோமே - ஆனந்த கதந்திரம் அடைந்து விட்டோமென்று. இப்பாடல் 1948 ஆம் ஆண்டில் எழுத்தன்று. இந்தியா உரிமைபெற்ற பின்னர், “சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று ஒருவன் பாடும் பாட்டில் வரலாற்றுண்மைக்கு இடமுண்டே யன்றிப் புலமை வீறுக்கு இடமில்லை. உரிமை என்பது பெருங் கனவாக இருந்த முப்பதாண்டுக்கு முன்னரே, சுதந்திரம் அடைந்து விட்டோம்; இனிச் செய்ய வேண்டுவது ஆடுவதும் பாடுவதுந்த்ான் என்று பள்ளுப் பாடிய பாரதியின் முன்னறிவுத் தெளிவு வாகை குடற்குரியது. இத் தெளி வெண்ணம் அவர் பாடலில் பலவிடத்துப் பொதிந்துள்ளது. 'முடிவிலாக் கீர்த்திபெற்றாய் புவிக்குள்ளே முதன்மையுற்றாய்” என்று காந்திப்பெருமான் புகழை முன்னரே உணர்ந்து துணிவு தோன்ற அவர் பாராட்டுதல் காண்க. -

பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும்

காலமெலாம் புலவோர் வாயில் --- துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்

இறப்பின்றித் துலங்கு வாயே . இப்பாடல் மூதறிஞர் உ.வே.சா.மகாமகோபாத்தியாயப் பட்ட்ம் பெற்றபோது பாரதி பாடிய வாழ்த்து. இவ்வாழ்த்துப்பா சென்னைக் கடற்கரையில் நிறுவப் பெற்றுள்ளன. உவேசா, சிலையடிக்கீழ்ப் பொறித்தற்கு ஏற்றது என்று அறிஞர்கள் கருதுவரேல்,கூர்த்தபுலவன்பாரதி என்பது வெள்ளிட்ைமட்ை'வெள்ளிப்பனிமலையின் மீதுல்வுவோம்', 'சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்’ என்ற பாரதி கனவுகள் இன்று எவ்வளவு மெய்யாகி வருகின்றன. நாடு. எதிர்காலத்து இங்ஙனம் இருக்கவேண்டும் என்றுஅறிவுரை கூறுவது பாரதிவெறிஞர்க்குஅத்துணைப்பிடித்தமில்லை.நாடு அங்ஙனம் இருக்கும் என்ற பெருந்தெளிவில், இருந்ததாகவே கொண்டு பாடும் இன்பக் கனவினர் பாரதியார்.

கம்பத்தின் கீழ்நிற்றல் காணிர்-எங்கும்

காணரும் வீரர் பெருந் திருக்கூட்டம்