பக்கம்:இலக்கியச் சாறு.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

வ.சுப. மாணிக்கனார்



நம்பற் குரியர் அவ்வீரர்-தங்கள்

நல்லுயி ரீந்துங் கொடியினைக் காப்பர். இழிவுகொண்ட மனித ரென்பது

இந்தியாவில் இல்லையே. எல்லோரும் சம மென்ப துறுதியாச்சு சங்குகொண்டே வெற்றி யூதுவோமே. எட்டையும் பெண்கள் தொடுவது தீமையென் றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார் வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போ மென்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார். எழுதிய நாளையும் அன்று இருந்த சூழ்நிலையையும் அறிந்து பாரதியார் பாடல்களைப் படித்தாற்றான் அவர் தனிப் புலமை எதிரதை முன்னுணர்ந்து பாடிய அறிவுவீறு நன்கு புலப்படும். இன்றேல், இலக்கிய அழகு புலப்படுமே யொழியப் புலவன்தன் எண்ணக் கூர்மை புலனாகாது. இப்பாடல் இன்னநாளிற் பாடப்பட்டது என்ற குறிப்பு விளக்கத்தோடு பாரதி பாடல்களைப் பதிப்பது கற்பவர்க்குப் பெருந்துணை செய்யும். 'அடைந்து விட்டோம், முதன்மை யுற்றாய், 'உறுதியாச்சு’ ‘மாய்ந்துவிட்டார்’, ‘தலை கவிழ்ந்தார்’ என்பவற்றில் வரும் இறந்த கால வினைமுற்றுக்கள் அடைந்துவிடுவோம்’, 'முதன்மை உறுவாய்', 'உறுதியாகும்’, ‘மாய்ந்து விடுவார்', 'தலைகவிழ்வார்' என்று பாரதியார் கண்ட எதிர்கால நல்வாழ்வைச் சுட்டுகின்றன. இவை விரைவில் வரும் என்ற தெளிவ்ால், வந்தனவாகவே கொண்டு இறந்தகால நடையில் புலவர் பாடலாக்கினார். பாரதியார் கண்ட நனவெனத் தக்க நாட்டுக்கனவுகள் புதியனவாயினும்,அவற்றைச்சொல்ல அவர் மேற்கொண்ட நடை தொல்காப்பியப் பழமையுடையது என்பது பின்வரும் நூற்பாவால் விளங்கும்: வாராக் காலத்தும் நிகழுங் காலத்தும் ஒராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள என்மனார் புலவர்.