பக்கம்:இலக்கியச் சாறு.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு 207

மதவொருமை

நாட்டில் பல மதங்கள் இருப்பது பாரதக் கவிஞனுக்கு உடன்பாடே. அம்மதங்களும் மத நூல்களும் பாரதத்தின் பெருமையாகும் என்பது அவர் துணிவு. ஞானத்திலும் பரமோனத்திலும், சாரம் மிகுந்த சாத்திரத்திலும், யாகத்திலும் தவவேகத்திலும் யோகத்திலும், தெய்வ பத்தியிலும் உயர்ந்த நாடு எனவும் பூரண ஞானம் பொலிந்த நன்னாடு, புத்தர்பிரான் அருள் பொங்கிய நாடு எனவும், -

தெய்வம் பலபல சொல்லிப் பகைத்தியை வளர்ப்பவர் மூடர் உய்வதனைத்திலும் ஒன்றாய் எங்கும் ஒர்பொருளானது தெய்வம் தீயினைக் கும்பிடும் பார்ப்பார் நித்தம் திக்கை வணங்கும் துருக்கர் கோயிற் சிலுவையின் முன்னே நின்று கும்பிடும் யேகமதத்தார் யாரும் பணிந்திடும் தெய்வம் பொருள் யாவினும் நின்றிடுந் தெய்வம் பாருக்குள்ளே தெய்வம் ஒன்று இதில் பற்பல சண்டைகள் வேண்டாம் எனவும் மதங்களுக்குள் ஒருமைப்பாடு காட்டுவர் பாரதியார். புதிய ஆத்தி குடியிலும்,

ஆத்தி சூடி இளம்பிறை யணிந்து - மோனத் திருக்கும் முழுவெண் மேனியான் கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன் மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன் ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர் உருவகத் தாலே உணர்ந்துன ராது பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே அதனிலை ஒளியுறும் அறிவாம் எனப் பல மதங்களை இணைத்துப் பாடுகின்றார். இங்ஙனம் மொழி யொருமைப்பாடு, இன வொருமைப் பாடு, மதவொருமைப்பாடு வேண்டும் பாரதக் கவி பாரதியார் எந்த ஒருமைப் பாடும் முடிவில் தேசிய ஒருமைப்பாடாக நிறைவுறவேண்டும் என்று பாரத மக்கட்கு அறிவுறுத்துவர். இப்பேருண்மை அவர்தம் எல்லாப் பாடலுக்கும் நிலைக்களனாகும். -