பக்கம்:இலக்கியச் சாறு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியச் சாறு

23



இந்நிலையில்தான் மன மாற்றம் என்ற ஓர் உத்தியை எழுத்தாளர்கள் கூடுதலாகக் கையாள வேண்டும். குடும்பவுறவுப் புதினங்களிலும் கதைகளிலும் நாடகங்களிலும் இந்த உத்திக்கு இடன் பெரிதும் உண்டு. சில எழுத்தாளர்கள் முன்பே இதனைச் செவ்வனம் கடைப்பிடித்துள்ளனர்.

  வராகசாமியின் மனைவி மேனகா பணக்காரன் நயினாமுகமதுக்குச் சூழ்ச்சியால் விற்கப்படுகின்றாள். அதனைப் பொறாத முகமதுவின் மனைவி நல்லாள் நூர்சகான் மேனகையின் கற்பைக் காப்பாற்றி மீண்டும் அவள் கணவனிடம் ஒப்படைத்து ஐயப்படாமல் இல்லறம் நடத்தச் செய்கின்றாள். இது வடுவூரார் காட்டும் (1920) நன் முடிபு. தேர்வில் தோற்ற சகந்நாதனும் அலைந்தும் வேலை கிடைக்காத மகாதேவனும் தற்கொலை செய்யப் போனவிடத்தில் சந்திக்கின்றார்கள். மனம் மாறி மகாதேவன் நிறுவனம் அமைத்து முன்னேறுகின்றனர். இது கல்கி கதையின் நல்லுத்தி. 
  விதவை மனத்திலும் ஒரு மனமாற்றத்தினை 'நினைவு முகம் மறக்கவில்லை’ என்ற கதையில் இராமையா புலப்படுத்துவர். விதவைத் திருமணம் நடந்த முதலிரவில் புதிய கணவன் தொடவரும்போது, முதற் கணவன்முகம்நினைவுக்கு வர உறவு நீங்கிற்று என்பது இக்கதையின் முடிவு. பிறன் மனையான சாவித்திரியும் இளையபாலுவும் கொண்ட சிறு மயக்கம் ஒரு காலத்தில் மறைந்தது என்பதனையும் எந்தத் துணிகரமான செயலுக்கும் ஒரு எல்லை உண்டு என்பதனையும் 'மோகினி மாயை' என்ற கதையில் கு.ப. இரா. துணிவுபடச் சொல்கின்றார்.
  அண்மைக் காலத்தும் இத்தகைய மனமாற்ற உத்திக் கதைகள் வந்துகொண்டிருக்கின்றன. 'மகள் மருமகள்’ என்ற கதையில் தன்மருமகள் இலக்குமியைத் துன்புறுத்திய ஒரு மாமி தன் மகள் அவள் மாமியால் துன்புறுத்தப்பட்டுத் திரும்பியதைக் கண்டபோது உண்மை நிலை புரிந்ததாம். குழந்தையொடு இருந்த விதவை கல்யாணியைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினான் பெரும் பட்டதாரி இராமநாதன்.அதனை மறுத்துக் கொண்டிருந்த தாய் மீனாட்சி