பக்கம்:இலக்கியச் சாறு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

வ.சுப. மாணிக்கனார்



நிறைவான கருத்துடையவரும் கொஞ்சம் குறைவான கருத்துடையவரும் உளர். குறைவானது என்ற எண்ணத்தோடு, இடை இலக்கியங்களைப் படிப்பாரும், படிக்க வேண்டா என்று பகைப்பாரும் உளர். இயற்கை வறட்சி, வானக்கற்பனை, உலகியலின்மை, புராணக்கதை, சமயப் படிவம், அயல் நாகரிகக் கலப்பு, சொற்சிலம்பம் என்ற காரணக் கூறுகளைக் கொண்டு இன்டக்கால இலக்கியங்களைக் குறை மதிப்பீடு செய்ப. காப்புக்காலம்

இலக்கியப் பார்வை என்பது தனிப்பார்வையன்று தன் குறுங்கண்ணொடு பார்ப்பதன்று. காலச் சூழலுக்கும் இன வேட்கைக்கும் ஏற்ப இலக்கிய வகைகளையும் இலக்கியக் கூறுகளையும் புலவர்கள் படைக்கின்றனர். மக்களின் மனப்பாங்குகள் மாறுகின்ற திசை நோக்கி இலக்கியம் திசை திரும்பிக் கொள்கின்றது.மன்னாயத்தின் எண்ண நாடிபிடித்து எழுத்துக்கள் ஒடுகின்றன. ஆதலின் இலக்கியப் பார்வை என்பது கால இனப் பார்வை.

சங்க காலம் என்பது உள்ளுர்க்காலம். போர்கள் பல நிகழ்ந்தாலும் அவை மூவேந்தருள் அமைந்த அகப்பூசலேயாகும். சங்க மூவேந்தர்கள் தமிழெல்லையின் புறத்தே சென்று போரிட்டனர். ஆனால் தமிழகத்துள் புறத்தார்க்கு இடங்கொடுக்கவில்லை. புறநானூறு ஒராற்றான் தமிழ் மன்னர்களைப் பற்றிய அகநானூறேயாகும். கம்பர் கூறியது போல அகமாயினும் புறமாயினும் சங்கச் சான்றோர்களின் கவிகள் சவியுறத் தெளிந்து தண்ணென்ற யாற்றொழுக்கு உடையனவாகக் கிடந்தன. 'கவி எனக் கிடந்த கோதாவிரி'-கிடந்த என்று பாடுவதால்,கொந்தளிப்பின்மை பெறப்படும்.

சங்கப் பிற்காலம் புறத்தார் தமிழகத்தார் ஆன காலம்; தமிழும் தமிழரசர்களும் முதன் முதலாகத் தம் தனி முதன்மை இழந்த காலம். சங்கக் கல்விநெறி துண்டிக்கப்பட்டது.உள்ளது காத்தாற்போதும் என்றாயிற்று. சிதறுண்ட செய்யுட்களைத் தேடிச் சிதறுபடாவாறு அழகிய தொகைகளாக்கித் தந்தனர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/46&oldid=551044" இலிருந்து மீள்விக்கப்பட்டது