பக்கம்:இலக்கியச் சாறு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

வ.சுப. மாணிக்கனார்



இடைக்காலப் பனுவல்களைச் சிற்றிலக்கியங்கள் என்று சொல்லுகின்றோம். சிறுமையடுத்த இப்பெயர் பெருமைக்கு உரியதாகவும் இல்லை; பெருமை தருவதாகவும் இல்லை.மும்மணிமாலை, இரட்டை மணிமாலை, தசாங்கம், சிலேடை வெண்பா இவைகளும் சிற்றிலக்கியங்கள்; இவற்றோடு ஒப்ப, கலிங்கத்துப்பரணி, மூவருலா, முக்கூடற்பள்ளு, குற்றாலக் குறவஞ்சி, நந்திக் கலம்பகம், பாரத வெண்பா இவையும் சிற்றிலக்கியங்களா? திருக்குறளைப் பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக எண்ணிவரும் மரபுடைய நமக்கு இது சரியென்று பட்டாலும் படும்.அளவும் பொருளும் திறமும் பாராமல், பலசரக்குப் போல மொத்தமாகச் சிற்றியலக்கியங்கள் என்று பெயர்ப்படுத்துதல் அறிவியலன்று. எண்ணப்படும் நூலினம் ஒருதரமாக இருத்தல் வேண்டும்.

வரிசையறிதலோ அரிதே' என்பர் கபிலர்.

நூல் வளர்ச்சி

இடைக்காலத்தில் தமிழ் வளர்ச்சியில் ஏற்பட்ட புதிய சில கூறுகளை-தள்ளமுடியாத சில தமிழ் நலங்களைப் பார்ப்போம். சங்ககாலம் தனிப்பாட்டுக் காலம் தொடர் பற்ற தனிப்ாடல்கள் யாப்பதே சங்கப்புலவர் மனமாக இருந்தது. ஒரு பாடல் எழுதி அமைந்த புலவர்கள் பலராகக் காண்கின்றோம். தினைபற்றி நூறுபாடல் அளவு எழுதிய எல்லையை ஐங்குறுநூறு காட்டுகின்றது. நூறு பாடல் என்பது கிட்டத்தட்ட ஐந்தாறு அடிகளாகும். மதுரைக் காஞ்சி, மலைபடு கடாம் முதலிய நெடும் பாடல்களும் தனிப்பாடல் வகையாகிப்பத்துப்பாட்டில் இரு பாட்டுக்கள் என எண்ணப்பட்டன. பெரும்பாலும் சங்கச் சான்றோர் தனிப்பாட்டு ஆசிரியர்களேயன்றி முழு நூலாசிரியர்கள் அல்லர். நூல் நூலாக எழுதும் மனமையை வளர்த்தது இடைக்காலம். ஒரு நூலென்ன பல நூல் எழுதும் ஆசிரியர் பலர் தோன்றினர். கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன்' என்று பாராட்டப் பெற்றவர்.நம்பியாண்டவர் இரண்டை மணிமாலை, மும்மணிக்கோவை, அந்தாதி, உலாமாலை, கலம்பகம், ஏகாதசமாலை என்றவாறு பத்துப் பிரபந்தங்களைப் படைத்தவாராவார். இளம்பூரணர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/48&oldid=551046" இலிருந்து மீள்விக்கப்பட்டது