பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் Q4 நோக்கை மாற்றுகிறது. எனினும் இதில் தனித்துவம் மிகுதி, தாட்டார் பாடலைப்போல இது கூட்டுப்படைப்பு அன்று. புதுக்கவிதையின் புதுப்போக்கு சோசலிசத் தன்மை வாய்ந்த தாக உள்ளது. சில கவிதைகளில் மனிதாபிமானமும் உழைப் பாளிகள் பக்கம் சார்ந்து நிற்கும் தன்மையும் காணப்படு கின்றன. புதுக்கவிதை புதிய உத்திகளைக் கையாளுகிறது. பழகிய பேச்சைப் பழகாத பொருளில் பயன்படுத்துகிறது. உணர்ச்சியை விடச் சிந்தனையைப் பளிச்சென்று மனத்தில் பதிய வைக் கிறது. இருண்மை யுத்தியைப் பயன்படுத்துகிறது. ஆயினும் சமூகச் சூழலைப் பற்றிக் கவிஞனுடைய அக நோக்கை மாற்று கிறது. எனினும், ஒரு மக்கள் போராட்டத்தில் உணர்ச்சி நிலையை உயர்த்தும் சக்தி அதற்கில்லை. உட்கார்ந்து படித்து, தனி மனிதன் தன் அக நோக்கை மாற்றிக் கொள்ள இது உதல் கிறது. இது மாபெரும் சமூக விடுதலை இயக்கங்களில் மக்கள் உணர்வை மாற்றப் பயன்படாது. இதனால்தான் லெனின் சொன்னார்: புஷ்கின் மக்கள் உணர்வில் நிலைத்து நிற்கிறார். மாயா காவ்ஸ்கி மின்னலைப்போல ஒளி சிந்தி மறைந்துவிடு கிறார். அவருடைய கதைகளை 5000 பிரதிகள் அச்சிடுங் கள், மாயாகாவ்ஸ்கியின் கவிதைகளை ஒரு லட்சம் அச்சிடுங்கள். புரட்சிப் பாணியில் கவிதை எனவே உழைக்கும் மக்களுக்கு ஆயிரக்கணக்கான கவிதை கள் தேவை. தீமையை அழிப்பதற்கும் நன்மையைக் கட்டு வதற்கும் உணர்ச்சியை உறுதிப்படுத்தவேண்டும். பொது உணர்ச்சியை உருவாக்கவேண்டும். இதற்கான பாரதிகள், பாரதிதாசன்கள் தேவை. கருவிகள் குரலிசைக்குத் துணையாக இருக்கவேண்டும். மனிதன் குரலில் பொருளும் உயிர்த்துடிப் பும் உள்ளது. கருவியில் அது இல்லை. நமது பக்தி இயக்கத் தில் மிக எளிய கருவிகளைப் பயன்படுத்தி, கூட்டமாகப் பாடி, ஒரு சமூக மாற்ற இயக்கத்தையே வெள்ளம் போலப் பெருக் கெடுத்து ஓடச்செய்தார்கள் நாயன்மாரும் ஆழ்வார்களும். வங்காளம், மகாராஷ்டிரம் இங்கெல்லாம் எளிய, இனிய உணர்ச்சிமிக்க கவிதைகள் மக்கள் உணர்ச்சியை ஒன்றுதிாட்டி யுள்ளன.