பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ நா. வானமாமலை காலக் கனவைத்தான் காண்கிறார்கள். அறிவுபூர்வமான திட் டத்தை, ஒன்றுபட்ட உணர்ச்சியால் உந்தப்பட்ட தருக்க மாடல்கள் தோற்றுவிக்கும். அவற்றைச் செயல்படுத்தத் தேவை யான உணர்ச்சி வேகத்தைக் கவிதை வழங்கும். போராடும் மக்களுக்கு ஆயிரம் உரைகளைவிட (Speeches) ஒரு பாடல்தான் செயலூக்கம் அளிக்கும். ஆயிரம் சத்திய மூர்த்திகளைவிட, ஒரு பாரதிதான் அவர்களுடைய உணர்ச்சி களை ஒன்றுபடுத்த முடிந்தது. ஆயிரம் கட்சிப் பேச்சாளர் களைவிட ஒரு மாயாகாவ்ஸ்கிதான் புரட்சிப் போராளிகளின் உணர்ச்சியை ஒருமுகப்படுத்த முடிந்தது. பத்தாயிரம் பொதுக் கூட்டங்களைவிட மாக்சிம் கார்க்கியின் தாய்’தான் லட்சக் கணக்கான போராளிகளை உணர்ச்சி கொண்டு எழச் செய்ய முடிந்தது. பங்கிம்சந்திரரின் வந்தே மாதரம் போல் வங்க சந்நியாசிகளின் பிரசங்கங்கள் வலுவுடையதாக இல்லை. பாடலின் சக்தி உரைக்கு இல்லை. கவிதையின் சக்தி பேச்சுக்கு இல்லை. இசை, இசைவு, இனிமை, இவை யாவும் கொண்ட பாடலைப்போல மனித உணர்ச்சிகளை ஒன்றுபடுத்தும் ஆன் மீகச் சாதனம் வேறெதுவும் இல்லை. இப்பாடலை மரபு வழிப் பாடல் என்று கூறுவோர் உள்ளனர். ஒவ்வொரு கவிஞனும் மரபை மீறிப் புதுமை புனைவதால்தான் கவிஞன் எனப் போற்றப்படுகிறான். அவன் உத்திகள் மரபுவழிப்பட்டவை யாக இருக்கலாம். புதிய உத்திகளை அவன் கையாளலாம். ஆயினும் இவை மூன்றும் இருந்தால்தான் நமது போராடும் உழவர்கள், தொழிலாளர்கள் உள்ளங்களை அவை பாதித்துப் பண்படுத்தும்; தனி உணர்வுகளைப் பொது உணர்வாக மாற்றும். புதுக்கவிதை புதுக்கவிதை படித்தவர்களுடைய படைப்பு. அது எழுதப் படும் கலை. இதில் conscious art அம்சம் அதிகம். எழுத்தறி யாதவர்களுக்கு அது பயன்படாது. பாடலைப்போல அதில் இசைப்பாங்கு இல்லை. இசைவு (rhythm) மட்டுமே உள்ளது. பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டையார், இளையராஜா போன்றவர்களது பாடல்களைப் போல இது படிப்பு அறியாத வர்களைப் பாதிப்பதில்லை. ஆயினும் படிக்கத் தெரிந்தவர் களின் மனத்தில் அழகியல் விளைவுகளை உண்டாக்குகிறது. புதுக்கவிதை மனிதனுக்குத் தீமையானவற்றின் மது மாபெரும் அருவருப்பை உண்டாக்குகிறது. ஒரு சிந்தனைத் தொடரைத் துவக்கி வைக்கிறது. சும்நிலை பற்றிய அக