பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 97 வாழ்க்கை பல கனவுகளைப் படைக்கிறது. அவற்றைச் செயல் படுத்த உற்சாகம் அளிப்பது கவிதை. இந்திய விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பாடல் கள் போராளிகளின் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டன. கருத்துக்களை உணர்ச்சிகளாக ஆக்க, கோபம், உறுதி போன்ற உணர்ச்சிகளைப் பெரிதும் விளக்க, பாடலில் ஆழ்ந்திருக்கும் கவித்துவ உணர்ச்சி பயன்படுகிறது. உணர்ச்சி, அறிவுத் திறனைச் செயலூக்கம் பெறச் செய்கிறது. மாறிவிட்ட உணர்ச் சிக்கும். மாறாமல் இருக்கும் புற உலகிற்கும் இடையேயுள்ள முரண்பாட்டை நீக்குவதற்கு உணர்ச்சி அறிவை ஊக்குவிக் கிறது. நமது அக உணர்ச்சி, அக அறிவு இவையிரண்டும் புற உலகை மாற்ற முனைகின்றன. புற உலகு பற்றிய நமது அக நோக்கை மாற்றும் சூக்குமச் &mgario 3aoang (Poetry is an instrument of change of the attitude of the mind to reality). . அறிவுபூர்வமாகப் போராடும் மக்களுக்கு உறுதியூட்டு வதற்கு உணர்ச்சிபூர்வமான ஒற்றுமை தேவை. வெவ்வேறு உணர்ச்சி நிலைகள் ஒன்றுபடுத்தப்படுவதற்குக் கவிதுை தேவை. உணர்ச்சி-இணைப்பு கவிதையால் செயல்படுத்தப் படுகிறது. லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வேண்டும் என்று அறிவுபூர்வமாக உணருகிறார்கள். பல பகுதிகள் பல வகையான உணர்ச்சிகளால் தூண்டப்பட்டு ஒரு கூட்டமாகச் சேருகின்றனர். விவசாயிகள், தொழிலாளிகள், படித்தவர்கள், கைத்தொழிலாளர்கள், வெள்ளைக் காலர் உழைப்பாளிகள், நீலக்காலர் உழைப்பாளிகள் தமது உழைப்பைச் சமூகத்திற்கு அளிக்கத் தயாராயுள்ளார்கள். வேலையின்மையின் காரணங் கள், வேலை கொடுக்கத் தேவையான நிலைமைகள் பற்றிச் சித் திக்கிறார்கள். பல வேறு திட்டங்கள் அரசியல் கட்சிகள்ால் முன் வைக்கப்படுகின்றன. இவையனைத்தையும் உணர்ச்சி பூர்வமான உறுதியாக ஒருநிலைப்படுத்தக் கவிதை தேவை. பரிணாமனது கவிதை எங்களைத் தெரியலையா? அல்லது பாரதியின் கவிதை காகிதம் செய்வோம் ஆயுதம் செய்வோம்’ என்ற பாடலை லட்சம் குரல்கள் இசைக்கும்ானால் எவ்வித மான உணர்ச்சியொற்றுமையும் உறுதி இசைவும் மக்களி டையே தோன்றும் என்று எண்ணிப் பார்ப்போம். கவிதை வருங்காலம் பற்றிய சிந்தனைபூர்வமான கனவு. ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்வோம் வருங்காலக் குறிக்கோள் கனவுதான். இந்த வருங்காலம் உள்ளத்தை எவ்வளவு தூரம் கவர்ந்துகொள்கிறது? பாரதியின் விடுதலைக் கும்மியில் சட்டங்கள் செய்யவும், பட்டங்கள் ஆளவும் பெண்கள் வருங் 49/7