பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒ5 - நா. வானமாமலை: உலகு குறிக்கோள் உலகமாக (ideal world) மனத்தில் வளரு கிறது. இக்குறிக்கோளை உணர்வுலகமாக, புறவுலக மாறுத லாக மாற்ற, கவிதை தோற்றுவித்த உணர்ச்சி வெள்ளம் முனைந்து ஓடும். இவ்வோட்டத்தை அறிவுபூர்வமான திட் டங்களால் வழிப்படுத்தவேண்டும். ஒரு குறிக்கோளுக்காக உணர்ச்சிப் பெருக்கோடு உயிர்விட்டவர்கள் எத்தனை பேர்? அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடக் கவிதை பாடிய வால்ட் விட்மன், பாப்லோ நெருடா, பாரதி, தாகூர் போன்ற கவிகளின் கவிதைகள் உணர்ச்சியை மட்டுமா பெருக்கெடுத் தோடச் செய்தன. பெருக்கெடுத்து ஒடிய உணர்ச்சிப் பெருக் கைக் குறிக்கோளென்ற அறிவுப் படிமத்தின் கரையூடே ஒடச் செய்தனர். வரலாற்றுக் கட்டங்கள், தங்கள் தங்கள் காலங் களுக்குரிய கடமைகளான குறிக்கோள்களைப் படைத்துக் கொடுக்கின்றன. சமுதாயங்களின் உறுப்பினர்களான மனிதர் கன்தான் இக்குறிக்கோள்களைப் படைக்கின்றனர். இக்குறிக் கோள்களை நோக்கி உணர்ச்சியும் அறிவும் செலுத்தப்படுகின் త్థ. 莎 உணர்ச்சி அறிவை வலுவுடையதாக்குகிறது. சமுதாய நியதிகளை அறிந்து, மனிதன் உணர்ச்சிபூர்வமான செயலில் ஈடுபடுகிறான். சமூகத்தை வர்க்கக் குறிக்கோளின் திசையில் மாற்றுகிறான். புரட்சியும் கவிதையும் கருத்துக்களை உணர்ச்சியாக்குவது கவிதை சமூக மாறுதலை (புரட்சியை) ஒரு விஞ்ஞானமாகக் கற்பது: தான் மார்க்சீயம். மார்க்சீயம் புற உலகை மாற்றுவதற்குப் புரட்சியைக் கருவியாக்குகிறது. - புற நிலைகள் பக்குவநிலைக்கு வரும்பொழுது, புரட்சி ஒரு செவிலியாகப் பணியாற்றுகிறது. என்று மார்க்ஸ் எழுதினார். புற நிலைகளில் புரட்சிகரமாகச் செயல்பட அகவயமான மாற்றத்தை உள்ளத்தில் உணர்ச்சி வயமாகத் தோற்றுவிப்பது கவிதை. இதுதான் கவிதைக்கும் புரட்சிக்கும் உள்ள தொடர்பு. சமூக உணர்வை, கவிதை ஆழப் படுத்துகிறது. தற்காலம் பற்றிய உணர்வை, உணர்ச்சியாகப் Lconsciousness emotion) GIGSF Gsti&DS. Loafs