பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 95; சோதனைத் திறமையும் கொண்ட விஞ்ஞானிகள் இவ்வாறு முடிவுகட்டியிருந்தார்கள். ஆர்கனோடு அதன் குடும்பம் என்று வேறு ஐந்து தனிமங்களையும் கருதி வந்தார்கள். இவற்றைப் பிற பொருள்களோடு கூடவைப்பதற்கு என்னவெல்லாமோ செய்து பார்த்தார்கள். இவற்றின் கும்பகர்ணத்தனத்தைக் கலைக்க முடியவில்லை. இங்கு ஒர் இலக்கிய ஆசிரியர் நடக்காத ஒன்றை நடந்த தாகக் கனவு கண்டார். அணுவின் அமைப்பைப் பற்றிய புதிய மாடல்கள் தோற்றுவிக்கப்பட்டன. இவற்றைப் பற்றிய ஆராய்ச்சியில் சுறுசுறுப்பற்ற வாயுக்களையும் சேர்த்துக் கொண்டார்கள். இவ்வாயுக்களின் நிலையான தன்மைக்குக் காரணம் கண்டார்கள். கும்பகர்ணனை எழுப்ப அரக்கர்கள் முயன்றது போல, உற்சாகிகள் தங்கள் வசமிருந்த விஞ்ஞான தொழில் நுட்பக் கருவிகளை எல்லாம் பயன்படுத்தி ஆராய்த் தார்கள். மந்த வாயுக்களின் அணு இணைப்பை ஆராய்ந்தார் கள்; அவற்றைப் பல தனிமங்களோடு சேரவைக்க முயன்றார் கள். பிளாட்டினத்தோடும் ஃப்ளோரினோடும் சேரவைப்பதில் வெற்றி கண்டார்கள். கதையாசிரியர் கண்ட கனவை இவர்கள் நனவுலக நிகழ்ச்சியாக ஆக்கினார்கள். இச்சேர்மங்கள், தனி மங்களாகப் பிரியும்போது மிகப்பெரும் அளவுக்குச் சக்தியை வெளியிடுகின்றன. கவிதையும் இலக்கியமும் படைக்கும் கனவுலகு, உணர்ச்சி யையும் உறுதியையும் அறிவியல் உலகிற்கு அளிக்கிறது. அறிவு மயமான, தருக்க ரீதியான அறிவியல், கனவு மயமான, உணர்ச்சிமயமான இலக்கியப் படைப்பால் ஊக்குவிக்கப்படு கிறது. அறிவியலும் இலக்கியப்படைப்பும் வெவ்வேறு திசை களில் இருந்து புற உலகை அறிகின்றன. ஆயினும் இலக்கியத் தைப் படைக்கும் கனவுலகு, அறிவியல் படைக்கும் அறிவுல கோடு இணைந்து புதிய அறிவைச் சிருஷ்டிக்கிறது. வெறும் கற்பனைகளாக இருந்த கவிதையுலகு, அறிவியலின் முனைப் பினால் அறிவு சார்ந்த கனவுத்தொகுப்பாக மாறுகிறது. இக் கனவுகளின் தாக்கம், புற உலகில் மனிதன் செலுத்தும் உழைப் பைத் தீவிரப்படுத்துகிறது. அகவயத் தீவிரம் மிகுதிப்பட்டால் உழைப்பின் முனைப்பு பன்மடங்கு வலுப்படுகிறது. இதை புணர்ந்துதான் லெனின் 'Dream, Dream, Dream' என்று கூறி

  1. F5F FF FF • .

அக உலகு, குறிக்கோள் உலகமாக மாறுகிறது கவிதை, உலகம் பற்றிய அக நோக்கை ஆழமாக்குகிறது, புரட்சிகரமாக மாற்றுகிறது என்று பார்த்தோம். மாறிய அக