பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 - - நா. வானமாமலை தலைவன் எஞ்சினியர் காரினின் ஒரு கதிரைக் கண்டுபிடித் தான். அது மனிதர்கள் அனைவரையும் நொடியில் அழிக்க வல்லது. அலெக்ஸியின் காலத்தில் அத்தன்மையுள்ள கதிர் இல்லவே இல்லை. இது முழுவதும் கற்பனை. கதிர் ஆராய்ச்சி பின் விளைவுகள் உயிராபத்தான விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்ற உண்மையை, கனவுலகில் கதையாக அவர் உரு வாக்கினார். மக்கள் அக உலகில் ஒரு புதிய அபாய அறிவிப்பை டால்ஸ்டாய் எழுப்பினார். அவர் மறைந்து பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் கனவு கண்டது போலவே ஒரு ஸ்படிகமத்தின் வழியாகச் செல்லக்கூடிய புது வகையான கதிர் "லாசர் கதிர்’ என்ற புதிய கதிராக வெளியேறுகிறது. இது மனிதனைக் கொன்றுவிடும் ஆற்றலுடையது. கண்ணுக்குத் தெரியாதது. இக்கதிரை மனிதன் மீது செலுத்தினால் அவன் எரிந்து செத்து விழுவான். இதனை எஞ்சினியர் காரின் பயன்படுத்தித் தன்னையே அழித் துக்கொள்ளுகிறான். நாவல் கதாநாயகனின் சாவு மூலமாக உலகிற்கு ஓர் எச்சரிக்கை விடுக்கிறது. இப்போது லாசர் பல ஆக்கப்பூர்வமான பணிகளில் பயன்படுத்தப்படுகிறது. உலோகங்களை வெட்ட, மிகக் கனமான கர்டர்களை இறக்க, தீர்க்க முடியாத வியாதிகளைக் குணப்படுத்த லாசர் கதிர் பயன்படுகிறது. திங்கள் ஹெர்பர்ட் பெள்ளின் உலகங்களுக்கிடையே போர் என்ற அறிவியல் கற்பனை நூலைப் படித்திருக்கலாம். அக்கதையில் மார்ஸ் கிரகத்தில் இருந்து மனிதரைப் போன் றிருக்கும் சில கிரகவாசிகள் உலகின் மீது படையெடுக்கிறார் கள். அவர்கள் அனைவரும் உலகவாசிகளால் கொல்லப்படு கிறார்கள். ஆபத்தும் அச்சமும் நீங்கிய பின்னர் அவர்கள் பயன்படுத்திய ஒரு கருப்பு நிறமான பொடியை உலக விஞ் ஞானிகள் ஆராய்கிறார்கள். உலகத்தை அழிக்க அவர்கள் பயன்படுத்திய அப்பொடியைப் பல சோதனைகளுக்கு உட் படுத்துகிறார்கள். பல சோதனைகள் தோற்றுப்போன பிறகு அவர்கள் அப்பொடியை இனம் காண்பதில் வெற்றியடை கிறார்கள். அது வரை எந்த ரசாயனச் செயல்பாட்டிலும் ஈடு படாமல் எந்தத் தனிமத்தோடும் கூடி சேர்மங்களைத் தோற்று விக்காத, சோம்பேறித் தனிமமென்று கருதப்பட்ட ஆர்கா னின் சேர்மம் என்று அவர்கள் கண்டுபிடித்தார்கள். இது போலவே ஐந்து மந்த வாயுக்கள் உலகில் உள்ளன. புற உலகை ஆராய்ந்த ரசாயனிகள் ஆர்கான் செயலற்ற, ரசாயனச் சுறுசுறுப்பில்லாத ஒரு தனிம்ம் என்றே முடிவுக்கு வந்திருந்தார்கள், ஒரு நூற்றாண்டாக அறிவுக்கூர்மையும்