பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியமும் உளவியலும் உளவியல் என்பது, எழுத்தாளன் பற்றிய உளவியலாக இருக்கலாம். அவனைத் தனிமனிதனாகவோ, வகைப்படுத் தப்பட்டவனாகவோ (Type) அல்லது இலக்கியப் படைப் பின் உளவியலாகவோ ஆராயலாம். அல்லது இலக்கிய நியதி கள் பற்றி ஆராய்ச்சியாகவும் இருக்கலாம். நான்காம் நிலை அவையினர் பற்றியது. இதை விடுத்து முதல் மூன்று நிலை களை இங்கு விளக்குவோம். பிராய்டு படைப்பாளி ஒரு மனவியல் நோயாளி என்பது பிராய்டின் கருத்து. இந்நிலை பைத்தியத்திற்கும் நரம்பு நோய்க்கும் இடைப்பட்டது. கவிஞன் பிறரினின்றும் வேறானவன். அவன் ஆழ்உணர்வினின்றும் பேசுகிறான் நினைவிவி). அவனிடம் புறவயக் குறைபாடு ஒன்று இருக்கும். திரேசியஸ், குருடன்; போப், கூனர்; பைரன், கோனற்காலன்; பிரெளஸ்ட், காச நோயாளி: கீட்ஸ் குள்ளமானவன். இக்குறைகளை உணர்வு திலையில் அறிந்து அதை ஈடுகட்ட வேறு திறமையை அவர்கள் வளர்த்துக்கொள்ளும் உள்ளார்வம் இவர்களது வெற்றிக்குக் காரணம். இலக்கியப் படைப்பின் காரணம் இவர்களது குறைகள. பிராய்டு பற்றிய விமர்சனம் இக்கொள்கை பற்றிய வினாக்கள் பல உள்ளன. குறை பாடு, இலக்கியத்திற்கு அடிப்படைக் கருத்தை அளிக்கிறதா? அல்லது தூண்டுதலை அளிக்கிறதா? துரண்டுதலை அளிக்கிறது என்பதை விடையாகக் கொண்டால் படைப்பாளி பிறரிடம் இருந்து வேறுபட்டவன் அல்லன். எழுத்தாளன் மனக்கோளாறு உடையவன் எனில் அவனது படைப்பு வாசகனுக்கு எப்படிப் புரியும்? சுய வரலாறு தவிர வேறேதாவது செய்தல் வேண்டும். அப்போதுதான் புரியும். மரபு வழியாகவோ, மரபு மீறியோ ஏதாவது படைப்பைச் செய்தல் வேண்டும். - பிராய்டின் கொள்கை உறுதியற்றது. அதை உறுதிப்படுத்த அவரது சித்தாந்த மாணவர்கள் முயன்றனர்; ஆனால், அடிப், படையை ஒப்புக்கொண்டனர். ஷேக்ஸ்பியர், லியோனார்டோ