பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியமும் இலக்கியக் கல்வியும்: வேறுபாடுகள் 1 for மாகவும் கவிதையாகவும் தோற்றமெடுத்தன என்று அவரு டைய மாயையும் உண்மையும் (Illusion and Reality) என்ற நூலில் குறிப்பிடுகிறார். ஒரு சமுதாய உண்மை, அதன் நிலையில் அல்வாறே கலைப் பயனை விளைவிக்க இயலாது. ஆனால், அவ்வாறு அமைய வேண்டும் என்பது தேவையில்லை. ஆயினும் உட்செறிவு, இசைவு-இணைவு போன்ற கலைப்பயன்களை அது பெருக்க முடியும். சமுதாயத்தோடு பொருத்தம் உடையனவும் சற்றும் பொருத்தமில்லாதனவும் ஆன இலக்கியப் படைப்புகள் தோன்றியுள்ளன. சமுதாய இலக்கியம், ஒருவகை இலக்கியம் என்பது ஒப்புக்கொள்ளப்பட வேண்டும். சமுதாயத்தைக் காட்டி நிற்பதுதான் இலக்கியம் என்று ஒரு வரையறை கூறி னால் அது இலக்கிய வகைகள் பலவற்றை, வரையறையின் எல்லையில் இருந்து அகற்றிவிடும் என்று சொல்லவேண்டிய சமூகவியலுக்கோ, அரசியலுக்கோ இலக்கியம் மாற்று அல்ல. அதற்குரிய நியதியும் நோக்கமும் தனியானவை.