பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t 8 நா. வானமாமலை. வர்க்கமற்ற சமுதாயத்தில் கலைஞன் முரண்பாடற்ற நிலையில் சமூகத்தோடு ஒன்றிவிடுவான். இது கனவு நிலை யன்று. நிகழக்கூடியது என்றும் கருத இயலாது” (ரெனி வெல் லாக் மற்றும் ஆஸ்டின் வாரன்). நேரடித் தொடர்பு’க் கொள்கையுடைய மார்க்சீயக் கொள்கையினரைப் பண்படா மார்க்சீயவாதிகள் என்றும் ‘மறைமுகத் தொடர்புக் கொள்கையுடைய மார்க்சீயவாதி களைப் பண்பட்ட மார்க்சீயவாதிகள் என்றும் ஆசிரியர் அழைக்கிறார் (ரெனி வெல்லாக், ஆஸ்டின் வாரன்). தற்காலச் சோவியத் இலக்கியவாதிகள் ஸ்மர்னால், கிரிப் ஆகியோர் பண்படாச் சமூகவியலை ஏற்றுக்கொண்டனர். ஷேக்ஸ்பியர் நடுத்தரப் பிரிவுப் பிரபுக்களை எதிர்த்தார்; ன பிரபுக்களது செயல் போக்கை 晏 மனித இனத்திற்கு விரோதமான கொள்கையையும் கலை ! எதிர்த்தார்.” மனிதப் பண்பு பற்றிய யின் பொதுத் தன்மையையும் மார்க்சீயக் கொள்கைக்குள் ளடக்கி விடுகிறார்கள். ஆயினும் மார்க்சீயம் காலத்திற்கேற்ற நிலையுடையது. இது வரவேற்கத்தக்கது. சமூகத்திற்கும் இலக்கியத்திற்கும் உள்ள சிக்கலைப் பல நிலைகளில் காணலாம். இவற்றை சரோட்டின் ஆராய் கிறார். - இலக்கியம் எந்த அளவு சமூகத்தைச் சார்ந்துள்ளது என்ற வினாவிற்கு மார்க்சீயக் கொள்கை விடையளிக்கவில்லை. இச் சிக்கல்கள் ஆராய்ச்சிக்குள்ளாக்கப்படுகின்றன. இலக்கியக் கருத்துக்களும் அடிப்படை நோக்கங்களும் சமுதாயச் சூழ்நிலை களைச் சார்ந்து அமையலாம். ஆனால் இலக்கிய வடிவங்கள் ஒவ்வொன்றும் எந்தச் சமுதாய நிலையில் இருந்து தோன்றி யவை என்று கூற முடியாது. சமுதாய-இலக்கியத் தொடர்புகள் பற்றிய ஆய்வுகள் திட மான முறையில் செயல்படுகின்றன. தொழில் ஒத்திசைவில் இருந்து இலக்கியம் தோன்றியது” என்ற பூச்சரின் கொள்கை சமுதாய-கலைத் தொடர்பு பற்றிய ஆய்வுகளின் விளைவாகத் தோன்றியது. கலையின் தோற்றம் பற்றிக் கடந்த நூறு ஆண்டுகளாக மானிடவியலாரின் ஆய்வுகள் பெரும் பயன் விளைவித்துள்ளன. பண்டைக் கிரேக்கப் புனைகதைகள், சடங்குகள், சமய வழிபாடுகள் இவற்றைச் சமுதாய வளர்ச்சி நிலையோடு பொருத்திக் காட்டும் ஆய்வுகளை ஜார்ஜ் தாம்சன் வியக்கத்தக்க அறிவுத் திறனோடு செய்துள்ளார். கவிதையின் தோற்றம் பற்றி கிறிஸ்தபர் காடுவெல்லின் ஆய்வுகள் முக்கிய மானவை. இனக்குழு மக்களின் தொழிலின் விளைவாகத் தோன்றிய மந்திர உச்சரிப்புகள், அங்க அசைவுகளோடு, நடன it.