பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியமும் இலக்கியக் கல்வியும்; வேறுபாடுகள் 117 அழகியல் பயன்களை உணர்ந்துகொள்ளும் வாய்ப்பைச் சமுதாயச் சூழ்நிலையே தீர்மானிக்கிறது. எந்தெந்தக் கலை வடிவம் ஒரு சமுதாயத்தில் தோன்ற முடியும் என்று நாம் சொல்ல முடியும். சில மார்க்ஸ் கொள்கையாளர் பொருளா தாரத்தையும் இலக்கியத்தையும் நேரடியாக இணைக்க முயன் றனர். இவர்களோடு சீய்னஸ் போன்ற பொருளாதார அறிஞர்கள் கருத்தில் ஒற்றுமை கொண்டிருந்தனர். 'செல்வம் கொழித்த காலத்தில்தான் கலைஞர் தழைத்தனர்” என்றார் கீய்னஸ். ஆனால் அமெரிக்காவில் செல்வம் கொழித்த காலத்தில் கவிஞர்கள் பெரும் அளவில் தோன்றவில்லை. துன்ப மயமாகவும் இன்பமயமாகவும் உலகைக் கண்டதாலேயே ஷேக்ஸ்பியர் துன்பவியல் நாடகங்களையும் இன்பவியல் நாட கங்களையும் எழுதினார் என்று ரஷிய நாட்டு மார்க்சீயக் கொள்கையாளர் கூற்று பயனுடையதல்ல. எழுத்தாளன் என்ற முறையில் ஷேக்ஸ்பியர் பெற்ற சமுதாய மதிப்பை இவர் காணத் தவறி விடுகிறார். இம்மேற்கோள்கள் காட்டப் படுவதால் இம்முறை பயனற்றது என்று சொல்ல வர வில்லை, - மார்க்ஸ், இலக்கியத்திற்கும் சமுதாயத்திற்கும் இடையே அமைந்த தொடர்பு நேரடியானதன்று என்பதை நுட்பமாக உணர்ந்திருந்தார். அரசியல் பொருளாதாரத் திறனாய்வு (Critique of Political Economy) grassigoto fossajä, கலையில் சிறந்த முன்னேற்றம் நிகழும் சில காலங்களில் அதோடு ஒத்த முன்னேற்றம் பொதுவான சமுதாய வளர்ச்சியிலோ பொருளாதார அடிப்படையிலோ காணப் படுவதில்லை. தற்கால நாடுகளின் நிலையோடு ஷேக்ஸ் பியர் வாழ்ந்த நாட்டு (சமூக நிலையையும், ஷேக்ஸ்பியர் சமூக நிலையோடு பண்டைய கிரேக்கர் சமுதாய நிலை யையும் ஒப்புநோக்கினால் இதற்குச் சான்று கிடைக்கும் என்று மார்க்ஸ் கூறுகிறார். எனவே பொருளாதார-சமூக வளர்ச்சிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் நேரடியான தொடர்பு கிடையாது. மறைமுக மான தொடர்புதான் உள்ளது என்று மார்க்ஸ் உணர்ந்திருந் தனர். மார்க்ஸ் சமுதாய வளர்ச்சிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் இடையே நிலவுகிற முரண்பாடுகளை ஆராய மூன்று நிலை களை வரையறுத்தார்: ஆக்கச் சக்திகள் (Productive forces), சமுதாயத் தொடர்புகள் (Social relations), தன்னுணர்வு நிலை: &sér (Self consciousness).