பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#15 நா. வானமாமலை யாருக்காக எழுதுகிறானோ அதனைப் பொறுத்து இலக்கியப் போக்கு அமைகிறது. அவை சார்ந்து நிற்கும் எழுத்தாளர் தற்காலத்தில் அதிகம். அவையினரிடையே ஏற் படும் மாறுதல், எழுத்தில் தாக்கம் பெறுகிறது. இத்தொடர்பு நேரடியானதாக இல்லை. ஆயினும் பல இடைநிலைகளில் தொடர்பு ஏற்படும். எழுத்தாளர்களே தங்களுக்குள் ஒரு குழுவை அமைக்கலாம்; ரியலிஸ்டு, சோசலிஸ்டு ரியலிஸ்டு போன்று. Socialist realism சமூக உடைமை உண்மையில் முழுவெற்றி

பெறாவிட்டாலும் அது சிறந்த இலக்கியமாக இருக்க முடியும். இலக்கிய ஆக்கத்துக்குத் தேவையான வாய்ப்புகளை அது அளித்தது. கொள்கை அளவிலேனும், சோவியத் ரஷியாவில் இலக்கியம் சமூகத்துக்குரிய ஒரு கலையாக மறுபடியும் அமைந் தது. கலைஞன் சமூகத்தோடு மறுபடியும் ஒன்றிக் கலந்துள் ទា. சமுதாயத்தைப் பற்றிய தமது உள் கருத்துக்களைக கொண்டுள்ள படைப்புகளை சிங்க்ளேர், கால்ஸ்வர்த்தி, பால்சாக் முதலியோர் எழுத்துக்களில் காணலாம். டர்கினேவ், டால்ஸ்டாய் நாவல்களில் 19ஆம் நூற்றாண்டின் உழவர் வாழ்க்கையையும் ஷோலக்காவ் நாவல்களில் 20ஆம் நூற்றாண் டுக் கூட்டுப் பண்ணை உழவர் வாழ்க்கையையும் காணலாம். சமுதாயம் வளரும் நிலைக்கு இலக்கியம் சிலவேளை வளரா மல் போகலாம். சில வேளை இலக்கிய உணர்ச்சி சமுதாய அரசியல் உணர்ச்சிக்கு மேலும் வளரலாம். சமுதாய நிலைமை களின் படைப்பாக ஷைலக் (ஷேக்ஸ்பியர்), கஞ்சன்’ (La Avere) என்ற Moliere எழுதிய நாடகங்களின் பாத்திரங் களைக் குறிப்பிடலாம். சில எழுத்தாளர்கன் சமூகத்தைக் கேலி செய்தும் வஞ்சப் புகழ்ச்சி செய்தும் எழுதுவர். அது சமூக ஒவியமாகாது. இலக்கியம் காட்டும் சமுதாயம் உண்மை யான சமுதாயம் அன்று.” ஷேக்ஸ்பியரின் வரலாற்று நாடகங் கள் நிகழ்வியல் உண்மையான வரலாறு அன்று. அது ஒரு கலைப் படைப்பு. ஆயினும் நாடகத்தின் பாத்திரங்களான அரசர்கள், வரலாற்று அரசர்களைவிடப் பண்பு நலன்களால் நம் மனத்தில் பதிகின்றனர். சமுதாயம் பற்றிய சில செய்தி களைத்தான் அவை கொண்டுள்ளன. "இனம், வாழ்வுச்சூழல், வேளை (moment) என்ற மூன்று திலைகள் இலக்கியத்தில் உள்ளன' என்கிறார் டெய்ன். வாழ்வுச்சூழலை ஆராயும்போதுதான் உண்மையான வர்க்கம் பற்றிய கேள்வி எழுகிறது. இலக்கிய மரபு நேரடியாகச் சமுதாய நிகழ்ச்சிகளோடு தொடர்புடையது அல்ல.