பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியமும் இலக்கியக் கல்வியும்: வேறுபாடுகள் Í 15 சாகுலின் (ரஷ்யர்) வர்க்கப் பிரிவினரின் இலக்கியங்களிடையே உள்ள வேறுபாடுகளை நுணுக்கமாக ஆராய்ந்துள்ளார். புஷ்கின் பிறப்பில் பிரபு; ஆனால் எளியவர்கள் மீது அனுதா பம் கொண்டிருந்தார். பிறந்த சமூகத்தின் செல்வாக்குப் பல எழுத்தாளர்களின் படைப்புகளின் கருத்துக்களில் மிகக் குறைவே. எழுத்தாளர்களின் கொள்கை, குறிக்கோள், மதிப்பு, கடமை இவற்றைப் படைப்பிலிருந்தும் எழுத்தாளர் வாழ்க்கை யிலிருந்தும் அறியலாம். - - தான் வாழ்கிற கால நிகழ்ச்சிகளில் எழுத்தாளர் பங்கு பெறவேண்டும். தனி எழுத்தாளரின் அரசியல் சமூகக் கண் ணோட்டங்களைப் படைப்புகளிலிருத்து அறிய ஆய்வுகள் நடத்தப்படவேண்டும். சோவியத் ஆய்வுகள் பெரும்பகுதி @33;ou Go. Soviet View of American Literature goil issoil களைச் செய்கிறது. அப்டன் சிஸ்க்ளேர், ட்ரீசர் இவர்களது சமுதாய அரசியல் கொள்கைகளைத் திறனாய்வாளர்கள் ஆராய்ந்துள்ளார்கள். சமுதாயத்தினின்றும் விலகிய மரபு மறுப்புநிலை, இலக்கியம் படைக்கும் தன்மை இவற்றை ஆராய்ந்து மதிப்பிடலாம். வர்க்கச் சார்பற்ற நடு நிலையா ளர்கள் உள்ளனர். எல்லா வர்க்கங்களிலும் இலக்கியப் படைப்பாளிகள் தோன்றலாம், வள்ளல்கள், பண்டைய புலவர்களை ஆதரித்த னர்; இன்று வெளியீட்டு நிறுவனங்கள் ஆதரிக்கின்றன. நாடக அரங்கு, சினிமா நிர்வாகிகளை எழுத்தாளர் நம்பவேண்டி யுள்ளது. பைரன், ஷெல்லி பொதுமக்களைக் கவர்ந்ததால், வெளியீட்டு நிறுவனங்களின் கட்டுப்பாடு அவர்களைப் பாதிக்க வில்லை. - அச்சு வெளியீடுகள் வர்க்க எல்லைகளைக் கடந்து எல்லா sufr#5f#sangst uļio GediğgøT. Fiction reading public aTsTT நூலை தார்ண்டைக் எழுதினார். லூயிஸ் கூறுகிறார்: பதினெட்டாம் நூற்றாண்டில் உயர்குடிப் பிறந்தவனும் உயர் கல்வி கற்றவனும் வாசிப்பதையே, கற்ற ஓர் உழவனும் வாசிக்க வேண்டியுள்ளது. இதற்கு மாறாக, பத்தொன்பதாம் நூற்றாண்டு வாசகர், பொதுமக்கள் {people) என்று அழைக்கப்படாமல் பொதுமக்களினர் {masses) என்று சுட்டிக்காட்டப்படுகிறார். அச்சிடப்படுவதால் எல்லா மக்களும் படித்துணர நூல்கள் தோன்றுகின்றன. அவரவர்கள் விருப்பத்தை நிறைவுசெய்து கொள்ளத்தக்க நூல்கள் வெளியிடப்படுகின்றன.