பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

நா.வானமாமலை


கருவே கதைப் படைப்பாகிவிடாது. ராஜம் கிருஷ்ணன் மாதர் சமூகநிலைபற்றி ஆழ்த்து ஆராய்ந்திருக்கிறார். இவர் அண்மையில் சோவியத் நாட்டிற்குச் சென்றார். அங்கு செல்லுமுன் சோவியத் வாழ்க்கையைப்பற்றிப் பல சந்தேகங்கள் அவருக்கு இருந்தன. அங்கு சென்று சில மாதங்கள் தங்கித் திரும் பினார். அங்கு மாதர் சமூகநிலை பற்றி நேரில் தெரிந்து கொண்டார். இந்தியாவிலும் சோவியத் நாட்டிலும் வாழும் மாதர்களின் சமூகநிலை வேறுபாட்டை விளக்க ஒரு நாவல் எழுத உத்தேசித்தார். இதுவே பொதுக் கருத்து (Main idea). இது சில மாற்றங்களுடன் அன்னையர் பூமி என்ற நாவலின் கதைக்கருவாகிறது.
குமரி மாவட்டத்தில் அரிசிப் பஞ்சம் ஏற்பட்டது. அடுத்த நெல்லை மாவட்டத்தில் குறைந்த விலைக்கு அரிசி கிடைத்தது. குமரி மாவட்ட எல்லைக்கு ஒரு மைலுக்கு அப்பால் படி அரிசி மூன்று ரூபாய்; ஒரு மைலுக்கு இப்பால் குமரி மாவட்டத்தினுள் படி ஏழு ரூபாய்.இங்கு இரு வகையான மக்கள் இருவிதமாகச் செயல்பட்டனர்.
1. கள்ளக் கடத்தல்காரர்கள் பெர்மிட் இல்லாமல் லாரி களில் அரிசியை ஏற்றிக் கொண்டுவந்து செக்போஸ்டுகளில் லஞ்சம் கொடுத்து அரிசியை உயர்த்த விலைக்கு விற்றனர்.
2 ஏழை மக்கள் நெல்லை மாவட்டத்திலுள்ள அரிசி கிடைக்கும் ஊர்களுக்குப்போய் குறைந்த விலைக்கு நாலைந்து, கிலோ அரிசி வாங்கி வந்தார்கள்.
இவ்விருவகைப்பட்டவர்களில் போலீசார் ஏழை மக்களைப் பிடித்து அரிசியைப் பறிமுதல் செய்தார்கள். லாரிகளில் போகும் அரிசியைப் பிடிக்கவில்லை. சில அரசியல் கட்சிகள் பெர்மிட், லைசென்ஸ் வேண்டாம் என்ற கோஷத்தைக் கொடுத்தன. மக்கள் மிரண்டனர். லாரியில் கடத்தல் அரிசி போவதை நிறுத்தினால், தாராளமாகக் குறைந்த விலையில் அரிசி கிடைக்கும் என்பதை உணர்ந்த தொழிலாளர்கள் லாரியை மறித்து அரிசியைப் பறிமுதல் செய்து வினியோகம் செய்யத் திட்டமிட்டார்கள். தயங்கித் தயங்கி ஏழைமக்கள் இதுதான் வழியெனக் கண்டுகொண்டார்கள். கொள்ளைக்காரர்கள் யார்? அரிசி கடத்தி அதிக லாபம் சம்பாதித்த பெரும் பணக்காரர்களா? தங்கள் தேவைக்கு அரிசி வாங்கிவரும் ஏழைகளா? பொன்னிலன் உண்மை நிகழ்ச்சிகளில் இருந்தே ஒரு நாவலை உருவாக்கினார். கொள்ளைக்காரர்கள் என்பது இந்த நாவிலின் தலைப்பு. கதைக் கருவும் இதுதான். அரிசிப் பஞ்ச காலத்தில் கொள்ளைக்காரர்கள் யார்? கள்ளக்கடத்தல்காரனா? ஐந்தாறு கிலோ அரிசியைத் தன் தேவைக்காகச் சட்டத்தை மீறிக்