பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்

35


எழுதினார். அவரது கட்டுரைகளில் வெளியாகும் கருத்துக்களின் செல்வாக்கு அவரது கலைப்படைப்புகளில் இல்லை. அவருடைய குறுநாவல்களிலும், முப்பெரும் நாவல்களான போரும் அமைதியும் (War and Peace), புத்துயிர்ப்பு (Resurrection), அன்னாகரினினா என்ற நாவல்களிலும் சமுதாய ஆய்வும் உளவியல் ஆய்வும் வேறெந்த ஆசிரியரிடமும் காணப்படாத அம்சமாகும். இச்சமூக ஆய்வின் முடிவுகள், கலைப்படைப்பாக சூழல், கதைமாந்தர், கதை நிகழ்ச்சிகளாகப் படைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கலைஞனின் அகவயக்கருத்தும் அவன் அனுபவத்தில் காணும் புறவய உண்மையும் முரண்பட்டு நிற்கலாம். அப்போது புற உலகப் படிமத்தையே அவன் உண்மையாகச் சித்தரிப்பான். அக உலக உள்ளடக்கமும் கலை உலக உண்மையும் சில ஆசிரியர்களிடம் வேறுபடுவதில்லை. அகவய நோக்கு கலைப்படைப்பின் உள்ளடக்கத்தோடு ஒத்துப்போவதும் உண்டு. அப்பொழுது கலைஞன் உள்ளத்தில் முரண்பாடு தோன்றுவதில்லை. மாக்சிம் கார்க்கி, ஷோலக்காவ், கான்ஸ் உன்டைன்பெடின், முல்க்ராஜ் ஆனந்த் போன்ற ரியலிச எழுத்தாளர்களின் அகவய உள்ளடக்கம், புறவய உண்மையின் பிரதிபலிப்பாக உள்ளன. இவர்கள் புற உலகையும் தங்கள் புறச் சூழ்நிலையில் உள்ள சமூகத்தையும் கூர்ந்து நோக்கி ஆராய்கிறார்கள். இவர்களது மனதின் உள்ளடக்கம், புறஉலகின் இயக்கத்தின் பிரதிபலிப்புகளாக உள்ளது. எனவே இவர்களிடம் முரண்பாடு தோன்றுவதில்லை. இக்கருத்துக்களைக் கீழ்வரும் குறியீடுகளால் விளக்கலாம்:

டால்ஸ்டாய்

அகவய உள்ளடக்கம் x கலைப்படைப்பு (ரியலிசம்)

கார்க்கி

புறஉலகு-அகவய நோக்கு-கலைப்படைப்பு உள்ளடக்கம்

கதைக்கரு(Theme)

இதனைக் கதைப்பொருள், கதையின் முதன்மையான கருத்து என்று பலவிதமாகக் கூறலாம். ஆசிரியனது வாழ்க்கை பனுபவத்திலிருந்து இது தேர்ந்தெடுக்கப்படுகிறது. அவனுடைய அனுபவம் தோராயமாகச் செதுக்கப்பட்ட கல்தான். இது இனி ஒரு சிலைபோல உருவாக்கப்படவேண்டும். கதைக்