பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்

43


அவ்வாறு வாசகன் முடிவுக்கு வருவதற்கேற்ற களத்தைப் படைப்பாளி அமைத்துக்கொடுக்கவேண்டும்.
இதை விளக்க, சிற்பக்கலையில் இருந்து ஒர் உதாரணம் காண்போம். நெல்லை மாவட்டத்தில் கிருஷ்ணாபுரம் என்னும் ஊரில் ஒரு துரனின் முன்புறத்திலும் பக்கவாட்டிலும் இரண்டு சிலைகள் உள்ளன. முன்புறத்தில் உள்ள சிலை ஓர் அழகான பெண் உருவச் சிலை. பக்கவாட்டில் உள்ள சிலை ஓர் அழகற்ற ஆண் உருவச்சிலை. இச்சிலைகளைப் பற்றி, ஒரு புனைகதை வழங்கி வருகிறது. ஓர் அரசகுமாரி ஒரு ரிஷி குமாரனைக் காதலித்தாள். அவர் கண் கவரும் அழகு வாய்ந்தவர். அவள் அவரையே திருமணம் செய்துகொள்ளுவேன் என்று உறுதியாக இருந்தான். ரிஷி குமாரன் என் தோற்றம் மாறிவிட்டாலும் அம்மை வளர்ந்து உடலெல்லாம் தழும்புகள் தோன்றி, கண்கள் பொட்டையாகி, கால்கள் முட்டுத்தட்டிப் போனாலும் நீ என்னைக் கணவனாக ஏற்றுக்கொள்வாயா? என்று கேட்டார். அவள் முகத்தில் உறுதியோடு வலது கை விரல்களில் ஆள்காட்டி விரவை மட்டும் நிமிர்த்தி மற்ற விரல்களை மடக்கி, அவருக்குப் பதிலளிக்கிறாள். இந்நிலையில் சிலை காணப்படுகிறது. இங்கு கலைஞன் அரச குமாரிக்கு மட்டுமல்ல, பார்ப்பவனுக்கும் அரசகுமாரியைப் போலவே தீர்ப்பளிக்கும் உணர்ச்சியை ஊட்டி விடுகிறான். இளவரசியின் தீர்ப்பை நாம் ஆமோதிக்கிறோம்.
இதுபோலவே Notre Dame de Paris என்ற விக்தர் ஹியூகோ வின் நாவலில் உடல் கோணலான ஒரு கூனன் வருகிறான். அவன் நோட்டர் டேம் கோயிலில் மணியடிப்பவன். இவன் ஒரு பெண்ணை உண்மையாகக் காதலிக்கிறான். ஞாயிற்றுக் கிழமைகளில் அவள் கோயிலுக்கு வரும்பொழுது ஒரு ரோஜாப் பூவை அவளுக்கு அளிக்கிறான். ஆனால் அவள் அவனது உள்ளத்தை அறியவில்லை; தன் அழகை அவன் ரசிப்பதாகக் கருதிக்கொள்ளுகிறாள். அந்தக் கோயிலின் சாமியார் அழகு வாய்ந்தவர், படித்தவர், இளைஞர். அவர் தனது விரதங்களின் கட்டுப்பாட்டால் கலியாணம் செய்துகொள்ள முடியாது. ஆயினும் அழகான பெண்களை விரும்பி அவர்களை மயக்கி இன்பம் நுகர்வதை வழக்கமாகக் கொண்டவர். இப் பெண்ணின் மீது கண் வைக்கிறார். அவளோடு பேசுகிறார். அவரது இனிமையான தோற்றமும் இனிமையான பேச்சும் அவளைக் கவர்கின்றன. அவள், அவர் வலையில் வீழ்கிறாள். இதைக் கூனன் கூர்ந்து நோக்குகிறான். இந்தச் சாமியாரையும் அவரது காம லீலைகளையும் அவரால் கெடுக்கப்பட்ட பெண்களையும் அவன் அறிவான். தன் மனத்தில் புகுந்துவிட்ட