பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

நா.வானமாமலை


5 அனுபவத்தின் பொதுமை, உருவத்தில் வெளிப்படுதல்
6 உருவ-உள்ளடக்க விகாரங்கள்.

மேற்கூறிய கூறுகள் உருவ அமைப்பை உருவாக்கத் துணை செய்யும்.

கலை இயைபு(composition)

கலை இயைபு என்பது ஒரு கவலப்படைப்பில், அதன் பகுதிகளுக்கும் அதன் முழுமைக்கும் இருக்கும் இணைப்பு (correlation of parts and subordination of various elements to the whole). முழுமையைப் பகுதிகள் வலியுறுத்தவேண்டும். பகுதிகள் முழுமையின் செல்வாக்கைக் குறைத்துத் தங்களைப் பார்த்துக் கவனத்தைத் திருப்பிவிடக்கூடாது. அலெக்ஸி டால்ஸ்டாய் எழுதுகிறார்.

ஒரு நோக்கைப் பார்த்து கலைஞன் தனது பார்வையைச் செலுத்தி, தனது கலைப்படைப்பின் நடுநாயகமான உருவத்தைச் சிந்திக்கவேண்டும். இவ்வுருவத்தின் தன்மையை வலுப்படுத்தும்படி படிக்கட்டுகள் போல மற்றையக் கதைமாந்தர் உருவங்களைப் படைக்கவேண்டும். இது தான் கலைக்காட்சியின் மையம் என்றழைக்கப்படும்.

லியோ டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பில் நடு நாயகமான கதைத்தலைவி மாஸ்லோவாவின் தன்மை மாற்றம் வெளிப்பாடு காண்கிறது. இதுவே (whole) முழுமையானது. இதன் பகுதிகளாகவே, முழுமையை வலியுறுத்தவே பிற கதை மாந்தர்களின் செயல்களும் சிந்தனைகளும் உணர்ச்சிகளும் பயன்படுத்தப்படுகின்றன. தெ நெக்லியூடாவ், நிலவுடைமைச் சமுதாயத்தின் செல்வாக்குமிக்க உறுப்பினன். தவறையுணர்ந்து அவளுக்கு நிவாரணம் அளிக்கத் தன்னைத்தான் அர்ப்பணித்துக் கொண்டு 4 வருடங்கள் சைபீரியாவிற்குப் போய் வாழ்கிறான். சட்டம் மாஸ்லோவாவிற்குத் தண்டனை யளிக்கிறது. நெக்லியூடாவ் தனக்குத் தானே தவறுக்குத் தண்டனையளித்துக் கொள்கிறான். ஆனால் மாஸ்லோவாவின் பாத்திரத்தை வரையும் பொது நோக்கிற்கு முரணாக நெக்லியூடாவின் பாத்திரம் சித்தரிக்கப்படவில்லை. அவனுடைய அத்தைகள், ஜூரர்கள், நீதிபதிகள், சிறைக்காவலர்கள் எல்லோரும் மாஸ்லோவாவின் பாத்திரத்தை வலியுறுத்தவே படைக்கப்பட்டுள்ளவர்கள். -
இக்கலை இசைவு என்ற திறன் எப்படித் தோன்றுகிறது? படைப்பாளிக்கு வாழ்க்கை பற்றித் தெளிவான கண்ணோட்