பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்

49


யத்துவம் பெறுகிறது. ஃபெடின் எழுதுகிறார்: "ஒரு கப்பலில் சரக்குகளைச் சரியாக விநியோகிக்க ஒரு திறமை பெற்ற ஊழியர் (Steredore) இருப்பது போல இசைவு, ‘இசைவு' அனுபவங்களை, கலையென்னும் கப்பல் விநியோகிக்கிறது. ஒரு படைப்பாளி தனது படைப்பில் எந்தெந்த அனுபவங்களைச் சேர்க்கலாம் என்று சிந்திப்பதைவிட எதையெதைச் சேர்க்காமல் விடலாம் என்று யோசிக்கவேண்டும். சிறந்த கலைஞன் ஒரு காட்சியையோ நிகழ்ச்சியையோ படைக்க ஆயிரம் விவரங்களைச் சொல்லுவதைவிட, சில முக்கியமான விவரங்களைக் சொல்லி நிகழ்ச்சியை மனதில் பதிய வைக்க இயலும். டாஸ்டாவெஸ்கி விவரங்களை அடுக்கிக் கூறுவார். டால்ஸ்டாய் திமிது கலை நோக்கை நிறைவேற்றிக்கொள்ள சில பொறுக்கியெடுத்த விவரங்களைச் சொல்லுவார். சொல்ல வந்த கருத்தையோ, நிகழ்ச்சியையோ, மனமாறுதலையோ, ஒன்றிரண்டு குறியீடுகள் அல்லது விவரங்களைச் சுட்டிக்காட்டிப் பதியவைக்கும் திறமை சிறந்த கலைஞர்களிடம் காணப்படும்.
புத்துயிர்ப்பில் டால்ஸ்டாய், கதாநாயகி மாஸ்லோவா, நெக்லியூடாவால் கெடுக்கப்பட்டு, தன்னை ஆதரித்தவர்களால் துரத்தப்பட்டு பல அவலங்களுக்குள்ளாகி, விபச்சார விடுதிக்குக் சென்று, சமூகச் சீரழிவுக்குட்டையில் அமிழ்வதை நாலைந்து பக்கங்களில் வருணிக்கிறார். பின்னர் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்கு நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்படுகிறாள். அவளை இரண்டு போலீஸ்காரர்கள் சிறையிலிருந்து நீதிமன்றத்திற்குக் கொண்டு வருகிறார்கள். இதே நேரத்தில் அவளது துயர வாழ்க்கைக்குக் காரணமான நிலப்பிரபு கவலையின்றி மெதுவாகப் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து உடையணிந்து கொள்ளுகிறான். இளமையைக் கடந்துவிட்ட அவன் உள்ளத்தில் ஒரு மாறுதல் தோன்றுகிறது. அதனை அவர் ஒரு செயலால் குறிப்பிடுகிறார். மடிக்கப்பட்டு நாற்காலியில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த உடைகளில் கையில் முதலில் வந்ததை எடுத்து அணிந்துகொண்டான். டை மாட்டுகிற ஊக்குகளில் ஒரு டஜன் இருந்தன. வைரம் பதித்த தங்க ஊசி கள் ஒரு தட்டில் கிடந்தன. எதையும் பொறுக்கி எடுக்காமல் கையில் வந்ததை எடுத்தான். இவ்விரு செயல்களும் ஆடம்பரத்தில் அவனுக்கிருந்த பற்று இப்போது இல்லை என்பதைக் காட்டும். அவன் இன்று நீதிமன்றத்தில் மாஸ்லோவா வழக்கில் ஜூரராகப் பணியாற்றப் போகிறான். அவளது வீழ்ச்சியில் தனக்கிருந்த பங்கை அவன் அறவே மற்ந்துவிட்டான். இவ்விரு காட்சிகள் கதைமாந்தர் இருவரது புறநிலைகளையும் அகநிலை

49/4