பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

நா.வானமாமலை


களையும் காட்டப்போதுமானவை. அதற்கு மேல் விவரங்களை அடுக்கிச் சொல்ல டால்ஸ்டாய் முயலவில்லை.

கதைப்பின்னல்

இது கதையின் முதன்மையான கருத்தை விளக்கத் தேவையான அனுபவங்களை ஒழுங்கமைக்கிறது. எனவே இது கருத்தோடு (Theme) தொடர்புடையது. அவ்வாறு செய்யும் பொழுது உருவம் உருவாகிறது. எனவே உருவத்தோடும் தொடர்புடையது. கருத்தைக் கலைப்படைப்பாக மாற்றுவதற்குக் கதைப் பின்னல் ஊடகமாக உள்ளது. இக் கலைக் கூறுபற்றி, உள்ளடக்கம் பற்றி விவாதிக்கும்போது சொல்லி விட்டேன். இங்கு திறமையான கதைப்பின்னல், கலைப்படைப் பின் வெற்றிக்குப் பெரிதும் காரணமாகிறது என்று குறிப்பிட விரும்புகிறேன்.

உள்ளடக்கம் கதைப்பின்னல் உருவம்

கதைப் பொருள் பற்றித் தெளிவான சிந்தனை கலைஞன் உள்ளத்தில் உருவாகிவிட்ட பின்னர், அவன் தனது கதைமாந்தர்களின் உணர்ச்சி, சிந்தனை, செயல்பாடு பற்றிச் சிந்திக்கிறான். அகவயமான உணர்ச்சியும் சிந்தனையும் புறவயமான செயல்பாட்டைத் தோற்றுவிப்பதைத் தெளிவாக உணருகிறான். இவ்வாறு அகவய எழுச்சியும் புறவயச் செயல் மாறுபாடுகளும் தோன்றுவதை இணைத்துத் தன் கலைக் கண்களால் காண்கிறான். ஃபடையேல் எழுதுகிறார்:

ஒரு கலைப்படைப்பின் இதயத்தில் ஆழ்ந்திருக்கும் கருத்து, சிந்தனை, உணர்ச்சிகளை எப்படி வெளியிடுவது என்று கலைஞன் எண்ணிப் பார்க்கும்போது, இந்நோக்கத்தை நிறைவு செய்ய எந்தச் சம்பவங்கள் பயன்படும், அச்சம்பவங்களின் செயல்பாடு எந்தப் போக்கில் போகும், சம்பவங்களின் வரிசைத் தொடர் எப்படியிருக்கவேண்டும் என்ற வினாக்களுக்கு விடை காண்பதற்காகச் சிந்தை செய்கிறான்.

கதைப்பின்னல், கதை முடிவுரை இற்றுப்போய்விடக் கூடாது. நடுவில் இங்கே கதை முடிந்திருக்கலாமே என்ற நினைவு வாசகனுக்குத் தோன்றும்படி கதைப்பின்னல் அமையக் கூடாது. இசைவு, கதைப்பின்னல் ஆகிய கலைப் படைப்புக்