பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்

53


எழுச்சி பெற்றுச் சுரண்டலை எதிர்த்துப் போராடுகிறார்கள். இதற்குப் பல புறநிலைக் காரணங்கள் உள்ளன. அகநில்ைக் காரணம் மனிதனுக்கு இயல்பாயுள்ள இன்ப வேட்கையே. எதிர்மறையாகச் சுரண்டலை எதிர்த்தும், உடன்பாடாக இன்ப வாழ்க்கைக்காகவும் மக்கள் போராடுகிறார்கள். இங்கே சமூகச்சூழலின் சாரம் குறிப்பிட்ட நிலைகளில் சுரண்டலை எதிர்த்தும் இன்ப வாழ்க்கைக்காகவும் போராடும் நிலைமையே.
சாரம் என்பது சமூக இயக்கத்தின் மிக முக்கியமான போக்கைக் குறிக்கும். சமூகப் பிரிவினர் இயக்கத்தின் போக்கால் (Dominant trend) பாதிக்கப்பட்டுச் செயல்மாற்றம் பெறுகிறார்கள். இது கலையில் தனி மனித நிகழ்ச்சி மாற்றங்களாகவோ உணர்ச்சி மாற்றங்களாகவோ காட்டப்படும். ஜெயகாந்தனின் புதிய வார்ப்புகளில் நிகழ்ச்சிகள், தாயின் மனதையும் பாட்டியின் உள்ளத்தையும் மாற்றுகின்றன. இவர்கள் புதிய வார்ப்புகளாக உருவாகிவிடுகிறார்கள். சமூக மதிப்புகளில் கட்டுண்டு கிடக்கும் தந்தை இதய அதிர்ச்சியடைந்து வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே ஊசலாடுகிறார். இவர் புதிய வார்ப்பாக மாறுவாரா அல்லது பழைய வார்ப்பாக உடைந்து போவாரா? என்ற வினாவை ஆசிரியர் எழுப்புகிறார்.
இலங்கை எழுத்தாளர் யோகநாதன் தன் கதைகளில் புதிய சமூக எழுச்சி, பழைய தேக்க நிலையை உடைத்து, தனித்தனி உழைப்பாளிகளை ஒன்றுபடுத்தும் புதிய போக்கைச் சுட்டிக் காட்டுகிறார். மாற்ற முடியாத பழைமைக்கு அடிமைப்பட்ட கதை மாந்தர்கள் சமூக வெள்ளத்தில் ஒதுக்கப்படுவதையும் காட்டுகிறார். இதுவே அவரது கதைகளின் உள்ளடக்கத்தின் சாரம்.
சமூகத்தில் நீண்ட நாளாக வழக்கத்திலுள்ள மரபுகள் மனித வாழ்க்கையின் சிறையாக இருக்கின்றன. அவற்றை உடைக்க உதிக்கும் புதிய சமூக எழுச்சியில் தனிமனிதர்கள் எவ்வாறு மாற்றம் பெற்று, உதயத்தை ஏற்றுக்கொள்கிறார்கள் என்ற செயல்பாடே பல இலக்கியப்படைப்புக்களின் சாரமாக இருக்கிறது.
எனவே சாரம் என்பது சமூகத்தில் தோன்றுகிற புதிய முற் போக்கான இயக்கங்களுக்கும் பழமையின் தேக்கமான நிலைமைக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தின் சாரமாகும். இச்சாரம் சர்வ வியாபகம் வாய்ந்தது. புதுமை அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் வகிக்கிறது. பழமையைப் பல முனைகளில் புதுமை தாக்குகிறது. எனவே வாழ்க்கையின் கூறுகளில் மாற்றங்கள் தோன்றுகின்றன. இது முதலில் குழப்பு