பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

நா.வானமாமலை


முக்கியப்படுத்தும் (formalist) போக்கு இலக்கியத்தில் குறைந்து வருகிறது. ஜனரஞ்சக இலக்கியத்தில் அதிகமாகியுள்ளது.

அமைப்பியல்(Structuralism)

மொழியியலிலும் நாட்டார் கதை பற்றிய ஆராய்ச்சிகளி:லும் அமைப்பியல் ஆராய்ச்சிகள் இன்று மேலோங்கியுள்ளன. இவை அத்துறைகளுக்குப் பயனுள்ளவையே. பாட மூலங்களை நிர்ணயிப்பதற்கு இவை பெரிதும் துணை செய்கின்றன. ஆனால் கலையின் படிமப்படைப்பு முறையில் இப்பகுப்பாய்வு முறை பயன்படுவதில்லை. சமூக இயக்கம் பற்றிய உணர்ச்சிவில்லாமல் கருப்பொருள் முரண்பாடுகளின் இயக்கத்தை ஆராய்ந்து வகைப்படுத்தி நாட்டார் கதைகளின் அமைப்பை ஆர்னே (நார்வே), பிராப் (ரஷியா) ஆகிய ஆய்வாளர்கள் நிர்ணயித்துள்ளார்கள். ஆர்னே ஸ்டித்தாம்ஸன் அடைவு என்றொரு நூலை இவ்விரு ஆசிரியர்களும் வெளியிட்டுள்ளார்கள். இவற்றில் சொல் கருப்பொருளின் வெளியீட்டுச் சாதனமாகக் கருதப்படுகிறது. விேஸ்லட்ராஸ் என்னும் பிரஞ்சு நாட்டார். பண்பாட்டியல் (Folk culture) ஆய்வாளர். எல்லாக் காலத்திற்கும் எல்லாச் சமூக இயக்கங்களுக்கும் பொருத்தமானது என்று முந்தைய ஆய்வாளர்கள் கருத்தை எதிர்த்து சமூகச் சூழலையும் வரலாற்று நிலைகளையும் மானிடவியல் அறிவையும் இவ் வாய்வில் (Structuralism) பயன்படுத்தி எதிர்நிலைகளை சொற் களாகக் கொள்ளாம்ல் கருத்துகளாகக் (concepts) கொண்டார். ஆயினும் கலைப்படைப்புகளுக்கும் இலக்கியப் படைப்புகளுக்கும் இம்முறையைப் பயன்படுத்தத் துணியவில்லை. படைப்புச் செயல் முறையில் (Process) கலைப்படிமங்கள் தோன்றுகின்றன. இவை சூட்சுமமானவை. பகுப்பு முறையும் இணைப்பு முறையும் (Ana{ytical and Synthetic methods) படிம இணைப்புக்களும் ஒரு கலைப்படைப்புச் செயல் முறையில் உள்ளன. இவையனைத்தையும் சாதிக்க அமைப்பியலால் முடியவில்லை.

சாரம்(Essence) உள்ளடக்கத்தைப் பற்றிப் பொதுவாகப் பேசினோம். உள்ளடக்கம் மிகப் பல விவரங்களடங்கியதாக இருந்தாலும் அதன் மிகப்பெரிய போக்குகள் சாரம் எனப்படும். கரிசல் நில வாழ்க்கை விவரங்கள் மிகப் பல. அம்மக்கள் பசி, பட்டினி, அறியாமை, மூடநம்பிக்கை போன்ற துன்பங்களில் உழல்கிறார்கள். இவற்றிற்குக் காரணம் சமூக அமைப்பின் வர்க்கப்பிரி வினையும் சுரண்டலுமே. நீண்ட காலமாக இத்துன்பங்களை 'விதி' என்று பொறுத்துக்கொண்டிருந்த மக்கள், இன்று.