பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

நா வானமாமலை


விடுதலை முயற்சியின் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களே என்று கூறினார். முழுமுதலே உலகம், இயக்கம், மனிதன் யாவற்றிற்கும் தோற்றக் காரணம் என்பது ஹெகலின் கொள்கை. எனவே அவர் உள்ளப்பிரதிபலிப்பிலிருந்து தனது சிந்தனையைத் துவங்கினார். முழுமுதலின் விடுதலை முயற்சிகளே கலையுருவங்களின் வேறுபாடுகளுக்குக் காரணம் என்று கருதினார்.
லியானார் டாடா-வின்ஸி என்னும் இத்தாலியப் பல்கலை நிபுணர்,

கலை வாழ்க்கையின் போலி மனிதனுக்கு ஐந்து புலனுறுப்புக்கள் உள்ளன. அவற்றின் வழியே புற உலக உண்மை, உள்ளத்தில் பிரதிபலிக்கிறது. எனவே இப்பிரதி பவிப்பை வெளியிடும் கலையுருவங்களும் வேறுபட்டிருக்கின்றன

என்றெழுதினார்.
இம்மானுவேல் கான்ட் என்னும் புகழ் பெற்ற ஜெர்மன் தத்துவ அறிஞர் எழுதினார்:

சிந்தனையும் தியானமும் புலனறிவும் என்றும் அழியாமல் நிலைத்திருப்பவை. இவற்றிற்கு ஆரம்பம் என்பதே கிடையாது. இந்த மனித இயல்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கலையுருவத்தைப் படைக்கின்றன.

இவ்வரையறைகள் கடவுள் அல்லது அழியாத மனிதப் பண்புகள் உருவப்படைப்புக்குக் காரணம் என்று கூறுகின்றன. கலை புறவுலகின் அகப்பிரதிபலிப்பு என்ற உண்மையை மறுக் கின்றன. புலனுறுப்புகள் வேறுபட்டிருப்பதால் உருவங்கள் வேறுபட்டிருப்பதாக டாவின்ஸி கூறுகிறார். அப்படியானால் ஐந்து வகைக் கலை உருவங்கள்தான் உள்ளனவா? புலனுணர்வு களின் கூட்டாகச் சில கலைப்படைப்புகள் இருப்பதில்லையா? இலக்கியம், நாடகம் போன்ற கலைகள் சில புலனுணர்வுகளின் மூலம் கிடைத்த மனப் பிரதிபலிப்புகளை வெளியிடவில்லையா? தற்கால டிவி, ரேடியோ முதலியவை ஐந்து புலனுறுப்புகளின் செயல்பாட்டினின்றும் தோன்றி, அவற்றிற்கே விருந்தாகிற கலையுருவத்தைத் தோற்றுவிக்கவில்லையா? மார்க்சீய அழகியல் இப்பிரச்சினைகளுக்குத் தத்துவ ரீதியான விடையளிக்கிறது. அகவயக் கூறுகளையும் புறவயக் கூறுகளையும் பிரித்துக் காணக்கூடாது. கலையின் புறவயக்