பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

73


இது போலவே உழைப்போடு பிறந்த பேச்சு, அதனோடு பிறந்த பிற உடலசைப்புகளோடு சேர்ந்து பேச்சுத் தோன்றுகிற காலத்தில் வெளிப்பட்டது. உழைப்பில் உடலுறுப்புகளின் இசைவு தோன்றுகிறது. பேச்சு பழகி, வளர்ச்சி பெறும் பொழுது அவசியமற்ற உடலசைவுகள் மறைந்துபோகின்றன. இந்த உண்மையை, தொழில் பற்றிய நாட்டார் பாடல்களைப் பாடகர் பாடும்போது காணலாம். பேராசிரியர் ஹர்க்காரி, தார்வாரிலுள்ள கருநாடகப் பல்கலைக்கழகத்தில் நாட்டார் வழக்காற்றுப் பேராசிரியர். அவர் உடலிசைவுக்கும் பாடல் இசைவுக்கும் (rhythm) உள்ள தொடர்பை ஆராய்ந்துள்ளார். மிகவும் பழக்கமான சில தொழில்களைச் செய்யும்போது தோன்றுகிற இசைவை அவர் ஆராய்கிறார். அவருடைய ஆராய்ச்சியின் சில அம்சங்களை இங்குக் குறிப்பிடுகிறேன்.
வட கருநாடகக் கிராமங்களில் ஏற்றம் இறைப்போர் பாடுகிற பாடல்களுக்கும் ஏற்றத்தின் இசைவுகளுக்கும் தொடர்பு உள்ளது. ஏற்றத்தின் மீது மனிதன் ஏறுகிறான். ஏற்றம் கிணற்றுக்குள் இறங்குகிறது. இது இசைவு (Rhythm)-1. பாடல் கீழ் ஸ்தாயில் காலடி வைத்து, ஏற்றம் இறங்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்றாற்போல் தொடங்குகிறது. பின் கமலை, நீரில் மூழ்குகிறது. குபுகுபுவென்ற ஒலியுடன் கமலையில் நீர் நிரம்புகிறது. இது சிறிது நேரந்தான் நடைபெறும்.
இப்போது இசைவு மாறுகிறது. இது இசைவு-2. ஏற்றத்தில் ஏறி நிற்கும் மனிதன் ஒய்வுகொள்ளுகிறான். கமலை நிறைந்தவுடன் கீழ்நோக்கி நடக்கிறான். ஏற்றக்கால் இறங்கு கிறது. கமலை உயர்கிறது. இது இசைவு-3. கமலை கிணற்றுக்கு வெளியே வந்ததும் தொட்டியில் நீரைக் கொட்டுகிறது. நீரின் ஒலி கேட்கிறது. இது இசைவு.4. இவ்வாறு மனித உடலின் அசைவுக்கும் கருவியின் அசைவுகளுக்கும் ஏற்றவாறு இசைவுகள் தோன்றி, தாளங்கள் உண்டாகி, சொல் சேர்ந்து பாடல் பிறக்கிறது.

சொல்லிசைவு-செய்யுள்
இதனைப் பாடிக் காட்டி இசைவுகளை விளக்குகிறார் பேராசிரியர் ஹர்க்காரி.
தற்காலத்தில் ஏற்றம் இறைக்காதபோதும், ஏற்றம் இல்லாத நன்செய்ப் பகுதிகளில் இந்த ராகத்தில், இதே இசைவுகளின் பாடல்கள் பாடப்படுகின்றன. உள்ளடக்கம் மாறுகிறது. இசைவுருவம் பொதுவாக இருக்கிறது. தொழில் பற்றி பல்லாமல், காதல், வீரம், சமூக நிகழ்ச்சிகள் பற்றிய உள்ளடக்கம் கொண்ட பாடல்கள் பாடப்படுகின்றன. ஏற்றத் தொடு