பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 密秀 முகத்திலே போட்ட முத்தை மாரி முடிச்சா இறக்கிடுவாள் கழுத்திலே போட்ட முத்தை மாரி காணாமல் இறக்கிடுவாள் பதக்கத்து முத்துக்களை மாரி மாறாமல் இறக்கிடுவாள் தோளிலே போட்ட முத்தை மாரி துணிவாய் இறக்கிடுவாள் வயிற்றிலே போட்ட முத்தை மாரி வரிசையாய் இறக்கிடுவாள் முட்டுக்கால் முத்தை மாரி முடித்திருந்து இறக்கிடுவாள் இப்படியே பாடல் நீளும். கோடங்கிப் பாட்டில் இவ்வுத்தி பெரிதும் பயன்படுத்தப் படும். தெய்வ ஆவேசம் வந்து ஆடும் கோடங்கி, கறுப்பன் மலையேற, போய்ச் சேரும் என்ற சொற்றொடரை இசைத் துப் பாடுவான். பூசை முடித்தேனப்பா போய்ச் சேரும் புண்ணியரே மன்று முடித்தேனிப்போ மன்னவரே போய்ச் சேரும் உள்ளுருத் தேவதைகள் உங்கள் எல்லை போய்ச் சேரும் பக்கத்துத் தேவதைகள் பதிதனக்குப் போய்ச் சேரும் பல ஊர்களை மாரியின் வாழ்க்கை நிகழ்ச்சிகளுக்கு இருப்பிட மாகக் கூறுவதுண்டு. இதுவும் மேற்கண்ட உத்தியின் ஒரு வடிவமே, பிறந்தா மலையாளம்-அவ போய் வளர்ந்தா-ஆள்பாடி இருந்தாள் இருக்கங்குடி-மாரி சமைந்தாள் சமயபுரம்-மாரி சாதித்தாள் கண்ணாபுரம் இப்படியே ஒரே வகையின் பல பிரிவுகளை அடுக்கிச் சொல்லு வதுண்டு. கட்டபொம்முவின் கூட்டத்தில், கட்டபொம்மு,