பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

签零 நா. வானமாமலை பின் 20 புதிய அடிகள் தோன்றியிருந்தன. இவை முதலில் பாடிய மாணவி பாடிய மெட்டில், மரபில் புதிய சொற்களை இசைத்துப் பாடியவை. நாட்டார் பாடல், சாதாரண மொழி, யில் தோன்றுவது. பாடுகிறவர்கள் பழைய பாட்டில் புதுமை 兹 父 * - - § ఢ - சேர்க்கிறார்கள். புதுமை, பழமையை அனைத்து வளருகiறது. இப்புதிய அடிகளும் பழைய அடிகளோடு சேர்ந்து வாய்மொழி யாகப் பரவுகின்றன. அதனால்தான் நாட்டார் பாடல்களில் பாடியவர் பெயர் இல்லை. உணர்வுபூர்வமான படைப்பாக அது இருப்பதில்லை. இந்த விழிப்பு-மயக்க நிலையில் உணர்வு பூர்வமான இச்சா சக்தியிலிருந்து மனம் விடுதலை பெறு கிறது. விடுதலை என்ற சொல்லைப்பற்றிப் பல கருத்து வேறுபாடு கள் உள்ளன, அதனைப் பற்றி இப்போது விவாதிக்கவேண் டியதில்லை. கவிதையின் மொழி ஹிப்னாடிக்’காக் இருக்கிறது. உறங்க வைக்கும் அளவுக்கு ஹிப்னாடிக்காக இல்லை. இந்த நிலை கேட்பவனுக்கும் ஏற்படவேண்டும் என்பதே நாட்டார் பாடலின் நோக்கம். இந்நிலையை ஏற்படுத்த நாட்டார் பாடகன் சில உத்தி, களைப் பயன்படுத்துகிறான். இது இலக்கியத்திலும் மேற் கொள்ளப்படுகிறது. - 3. ஒன்றுபட்டு ஒலிக்கும் சொற்களை அளவாகப் பயன் படுத்துதல். 2 சில சொற்களைத் திரும்பத்திரும்பப் பயன்படுத்துதல். 3 ஒற்றுமை, வேற்றுமையுடைய சொற்களையும் கருத்துக்களையும் பயன்படுத்துதல். இம்மூன்று உத்திகளின் மூலம் ஹிப்னாடிக் விளைவைக் கேட்போருள்ளத்தில் ஏற்படுத்துகிறார்கள். திரும்பக் கூறல்-மயக்க நிலை ஒன்று என்று குறிப்பிட்ட கருத்துக்குச் சில உதாரணங்கள் தருவோம். மாரியம்மன் பாட்டில் அவள் வைசூரியைக் குணப் படுத்துவாள்' என்ற கருத்தை முத்தை இறக்கிடுவாள்' என்று பாடல் கூறுகிறது. இதைப் பலமுறை, ஒவ்வோர் உறுப்பாகச் சொல்லி, முத்தை இறக்கிடுவாள்' என்று முடிக்கிறார். உச்சியிலே போட்ட முத்தை மாரி உடனே இற்க்கிடுவாள்