பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 83. வெள்ளத்தில் நான் மூழ்கப் போகிறேன்' என்று உறுதியாகக் கவிஞர் முடிவுக்கு வருகிறார். - கவிஞன் அகவுலகு حس مسمسم- سه تایی و یا دی آی تی پس هسس-سسه எத்தனை பாடல்கள் i ! புரட்சிக்காக? { புறவுலகு-பாட்டாளி உறுதி-பாட்டாளி யின் போராட்டம், வர்க்க இயக்க புரட்சிக் கீதம் ஆற்றின் மூழ்குவேன் இங்கு புறவுலகத் தூண்டுதலால் அகவுலகக் கனவுகள் தோன்றிக் கவிதைகளைப் படைக்க இயக்க ஆற்றில் மூழ்கும் உறுதிபெறும் கவிஞன் உள்ளத்தை இக்கவிதை காட்டுகிறது. வாய்மொழிப் படைப்பும் எழுத்துப் படைப்பும் எழுத்துக் கலையில்கூட உணர்ச்சி உயர்வுக்குக் கனவுலகப் பயணம் உதவுகிறது. எழுத்துக் கலை தோன்றுமுன் வாய் மொழிக் கலை கவிதையின் கடமையைச் செய்து வந்தது. நாட்டுக் கவிஞன் நேரில் கேட்போருக்காகப் பாடுகிறான். பாடுவோன், கேட்போன் இருவருக்கும் ஊடகமாக (medium) மொழி பயன்படுகிறது. நாட்டுக் கவிஞன் எழுத்து என்னும் வேலியால் கேட்போரிடமிருந்து பிரிக்கப்படவில்லை. சாதா ரணமொழியில் பேசி, பாடல் மொழியில் பேசி, பாடல் மொழி யில் பாடியவன், தான் விரும்புகிற உணர்ச்சிகளைக் கேட்போர் உள்ளத்தில் எழுப்புகிறான். பாட்டு, கதை, பேச்சு மூலம் ஒரு கனவுலகை அவன் படைக்கிறான். கேட்போரைவிட, கவிஞன் மொழியைத் திறமையாகக் கையாளுகிறான். பாடகனுக்கும் கேட்போனுக்கும் மொழி பொதுவானது. கேட்போரைவிடப் பாடகன் சிறிது அதிகமான மொழிப் பயிற்சியுடையவன். கேட் போனும் சில அடிகளைச் சுயமாகப் பாட முடியும். கவிமணி சங்கரனார் ஒர் ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் மாணவிகளுக்கு இசையாசிரியராக இருந்தார். கிராமப் புறத்து மாணவியரை நாட்டார் பாடல்களைப் பாடச்சொன் னார். ஒரு மாணவி சில அடிகளைப் பாடினாள். கேட்டுத் கொண்டிருந்த மாணவியர் அவள் பாடி நிறுத்தியதும் மேலும் சில அடிகளைப் பாடினார்கள், ஒவ்வொருவரும் பாடி முடிந்து