பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 நா. வானமாமலை மற்றொன்று: அதே பாப்ரியாவின் கவிதைதான்; காசாவதற்கு நாள் கேட்காத ஞானியாய் ஞாலத்தின் பிடரியின் மேல் தீ தாளக் கவிதைகளாய் நின்று முழக்கமிடும் பாட்டாளித் தோழர்களே... கண்களின் குளக்கரையில்- நின்று காகிதத் துரண்டில்களில் எத்தனை மீன்களைப் பிடிக்கப் போகிறேன்? உங்கள் புரட்சியின் பூபாள ராகத்தை எத்தனைக் காலம் இனிக் கேட்கப்போகிறேன்? புதுயுகப் பிறப்பிற்காக நானும் உங்களில் ஒருவனாக கொன்றைமலர் சிவப்புக் கவிதைகள் எத்தனை வழங்கப் போகிறேன்? மூச்சில் முடிச்சு விழும் வரை நான் மானுட நதியில் முழுகியெழப் போகிறேன் புறவுலகில் பாட்டாளியின் புரட்சிக் கீதத்தைக் கவிஞர் கேட் கிறார். அவர் உணர்வு அக்கீதத்தின் அழைப்புக்குச் செவி சாய்க்கிறது. புரட்சிக் கீதத்தில் உள்ளம் ஒன்றுபடுகிறது. இனி வருங்காலக் கனவுலகில் உணர்ச்சிபூர்வமாகவே அவர் புரட்சிக் கீதத்தின் பொருள்களைக் காணுகிறார். பாட்டாளிகள் படைக்க விரும்புகிற புதுவுலகை வரவேற்க, கொன்றை மலர்ச் சிவப்புக் கவிதைகள் வழங்கப் போகிறேன்’ என்று தன் னைத்தான் கேட்டுக் கொள்ளுகிறார். இவ்விருப்பம் ஒர் உறுதி யாக இறுக்கம் கொள்கிறது. போராடும் மனித குல