பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 8s. பாப்ரியாவின் கண் சிமிட்டும் கல்லறைகள்’ என்னும் தொகுப்பிலிருந்து ஒரு கவிதையை இதற்கு உதாரனமாகக் காட்டுவோம். உவகில் மானிட உரிமைகள் அடிமைப்படுத்தப் படும்போது புரட்சிக்கற்களை அடுக்கி புதிய பூவுலகாக மாற்றும் சக்தி படைத்தவைகள் எங்கள் காலக் கவிதைகள் தற்கால நிலையை முதல் மூன்று அடிகளில் கவிஞர் குறிப்பிடு கிறார். பின்னர் வருங்காலக் கனவுலகில் இறங்குகிறார். இக் கனவை மீண்டும் தற்கால நிலையோடு இணைக்கிறார். தற் கால அடிமைநிலையைக் கனவுலகில் பிறந்த எங்கள் காலக் கவிதைகள் மாற்றும் சக்தி படைத்தவை என்று உறுதியாக முழங்குகிறார். . - கனவுலகு- ༧ཚཝ་ཤ་སྐྱ་ مسحيي 4 4 புறவுலகு புறவுலகை நிகழ்காலம் மாற்றும் சக்தி படைத்தவை மற்றுமோர் கவிதை, பாப்ரியாவினுடையதுதான்; நாங்கள் பொதுவுடைமை நிழலில் பந்தலில் ஒதுங்கி பாரத மண்ணைப் பாட்டாளியுடையதாக்க சபதமெடுத்திருக்கிறோம் இங்கு மார்க்சின் புகழ்மிக்க வாசகத்தின் எதிரொலி கேட் கிறது. - . . Many philosophers have explained the world. The point is to change it. 49/6