பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 நா. வானமாமலை அவள் விருப்பங்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையைக் கனவுகள் உறுதிப்படுத்துகின்றன. அவை நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும் அவளது நம்பிக்கைகளைக் கனவு நிகழ்ச்சியாக இக்கவிதை சித்தரிக்கிறது. காதலன் அவளைக் காதலிக்கிறானா என்பது கேள்வியல்ல. அவன் நிஜமான மனிதனா என்பதும் கேள்வியல்ல. அவள் உள்ளத்தில் உரு வான மிக உயர்ந்த மானிடப்பண்புகளின் வடிவமே அவன். ஒரு புறவுலக மனிதனை நேசிப்பதுபோலவே தன் உள்ளப் படிமத்தை அவளால் காதலிக்க முடிகிறது. இப்படிமம் தன் னைக் காதலிக்குமா என்ற ஐயம் அவளுக்கு உண்டாகிறது. அப்போதுதான் அவள் கனவுலகில் ஆழ்ந்து தனது விருப்பங் கள் நிறைவேறுவதாக எண்ணுகிறாள். இக்கவிதை மந்திரவயமானது. கனவுமயமானது. கன வுலகில் ஆழ்ந்து அனுபவிக்கும் உணர்ச்சியைப் புறவுலகில் வாழும் தனது உணர்ச்சியாக இவள் கவிதையாக வெளியிடு கிறான். இங்கு கனவுலகும் புறவுலகும் தொடர்புகொள்ளு கின்றன. ஆங்கில இலக்கியத்தில் மத்திரத்தாக்கமும் கனவுலகத் தாக்கமும் சற்றும் கிடையாது என்று சில விமர்சகர்கள் கூறு கிறார்கள். அவர்கள் கவிதையின் தோற்றம் பற்றி ஆராயக் கூடாது என்ற கருத்துக்கொண்டவர்கள். ஆயினும் இக்கன வுலக எச்சங்கள் ஆங்கில இலக்கியத்தில் ஏராளமாக உள்ளன. இவை பற்றி மார்க்சீய விமர்சகர்கள் ஆராய்ந்துள்ளனர். பொதுவாக மந்திர உலகின் தாக்கம் கவிதையின் துவக்க காலத்தில் அதிகமாக இருந்தது. தற்காலக் கவிதையில் புறவுலக உண்மை கனவுலகத்தில் புகுந்து சங்கமமாகிறது. புறவுலகு பற்றிய கவிஞனின் நோக்கைக் கவிதை மாற்றுகிறது. அது மந்திரத்தோடு இன்னும் தொடர்புடையதாகவே உள்ளது. தற்காலக்கவிதை-கனவுலகத் தாக்கம் புற உலகு-கனஉலகு-புறஉலகு மாற்றம் தற்காலக் கவிஞன் காகிதமும் பேனாவும் எடுத்துக் கொண்டு கவிதை எழுத உட்காருகிறான். கவிதை எழுத முயலுகிறான். பண்டைய கவிதையில் இணைந்திருந்த ஆடல் பாடல்களிலிருந்து கவிதை விடுதலை பெற்று, அது ஒர் எழுதப் படும் கலையாக (writer art) மாறியிருக்கிறது. ஆயினும் மந்திரவுலகம், கனவுலகம் ஆகிய அம்சங்கள் கவிதையில் உள்ளன. இவையில்லாமல் கவிதையில்லை.