பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 79. டதே என்று சிறிது பொறாமையும் கொள்ளுகிறாள். அதனை அறிந்துகொள்ள, சங்கைப் பார்த்து ஆண்டாள் கேட்கிறாள்; கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்திருக்குமோ மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன், சொல்லாழிவெண் சங்கே சங்தைப் பார்த்ததும், புறவுலகப் பிரக்ஞையில் இருந்து கனவுல கப் பிரக்ஞையில் ஆண்டாள் ஆழ்ந்து விடுகிறாள். அதனைப் பார்த்துத் தனது உணர்ச்சிகளை வெளியிட்டுத் தன்னால் நுகர முடியாத திருமாலின் இதழ்ச்சுவையும் வாய்மணமும் எப்படி யிருக்குமோ என்று கேட்கிறாள். இங்கு அவளது பேரார்வமும் பெருவிருப்பும் வெளியாகின்றன, இவள் மனத்தில் உருவாக்கிக்கொண்டிருக்கும் ஒரு தெய்வப் படிமத்தோடு தொடர்புகொண்டுள்ள சங்கைப் பார்த்து, தன் விருப்பை வெளியிடுகிறாள். இப்படிமத்தோடு (ராஜமன்னாரோடு) தனக்குத் திருமணம் நடைபெறுவதாக ஆண்டாள் கனவு காணுகிறாள். அப்போது இப்படிமம் அவள் விரும்பும் குணங்கள் நிறைந்த மனிதனாகி விடுகிறது. தோரணம் கட்டுகிறார்கள். உறவினர் பூரண கும்பம் வைத்து மணமகளை வரவேற்கக் காத்திருக்கிறார்கள். ஆயிரம் யானைகள் சூழ மணமகன் நடந்துவருகிறான் என்று இவள் கனவில் காண்கிறாள். வாரணமாயிரம் சூழ வலஞ்செய்து நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர் பூரணபொற்குடம் வைத்துப் புரமெங்கும் தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான் இனி அவளே அவன் வருவதைக் காணுகிறாள்; கனவில்தான் நாளைத் திருமணம் என்று உறவினர் நிச்சயிக்கிறார்கள் திருமணப்பந்தல் கனவில் மறுநாளும் தோன்றுகிறது. சிங்கப் போல் கம்பீரமாக வீரன் ஒருவன் வந்து நிற்கிறான். அவன் தான் கோவிந்தன். நாளை வதுவை மனமென்று நாளிட்டு பாளை கமுகு பரிசுடைப் பந்தர்க்கீழ் கோளரி மாதவன் கோவிந்தன் என்பர்ன்-ஒர் காள்ை புகுதக்கனாக்கண்டேன்.தோழி நான்