பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 நா. வானமாமலை புறவய நிகழ்ச்சியின் i அகவய உணர்வு ;

(கனவுலகில் பெருஇவள்ளழாக அகவய உணர்வு பெருகுகிறது § புத்துணர்வு, இன்பத்தை நீடிக்கவும் நிலையாக்கவும் விருப்பம் j . இலகு கவிதையுலதாகத் கனவுலகால் மாற்றப்படுவதற்கு ஏராளமான மேற்கோள்கள் கொடுக்கமுடியும். இங்கு ஆண்டாளின் பாடல்கள் சிலவற்றை உதாரணம் காட்டி நமது கொள்கையை விளக்குவோம். துரீவில்லிபுத்துர் ராஜமன்னார் என்னும் தெய்வ உரு வத்தை ஆண்டாள் காதலித்தாள். அவளுக்கு ராஜமன்னார், கற்சிலையன்று. இத்தெய்வப் படிமம் ஒர் ஆண்மைமிக்க, பிறருக்குத் துணைசெய்கிற, கருணையுள்ளம் கொண்ட ஒரு மாமனிதன். இக்கருத்துருவத்தை அவள் தன் வளர்ப்புத் தந்தை பெரியாழ்வார் மூலம் அறிந்து காதல் செலுத்தி வந்தாள். அவளது பருவ வளர்ச்சியோடு, காதலும் வளர்ச்சி பெற்றது. அரசர்களும் பிரபுக்களும் மனம் பேசி வந்தால், இவள், தன்னைத் திருமால் ஒருவனுக்காகவே வளர்த்து வந்ததாகவும் வேறு யாருக்காவது தன்னைக் கொடுத்துவிட்டால் வாழமுடி பாது என்றும் சொல்லுகிறாள். மாதவற்கென்று உள்ளத்து எழுந்த தடமுலைகள் மானிடவற்கென்ற பேச்சுப்படில் வாழ்கில்லேன் கண்டாய் மன்மதனே இவள் திருமால் படிமத்தின் கையில் சங்கைக் காண்கிறாள். அது அவரோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. அவர் அதனை வாயில் வைத்து ஊதுகிறார். அவர் இதழ்களோடு தன் இதழ்களைச் சேர்க்கப் பேரார்வம் கொண்டுள்ள ஆண் டாள். அதனை உயிரும் உணர்வும் உடைய ஒரு மானிடப் பெண்ணாகவே கற்பனை செய்து அதனோடு பேசுகிறாள். இது கனவுலக நிகழ்ச்சி. கற்பூர மணம் மிகவும் இனிமையான நறுமணம். காதலர் இதழ் சுவையாக இருக்கும் என்று அவள் எண்ணியிருக்கிறாள். திருமாலின் வாய்ச்சுவையும் வாய்மனை மும் எவ்வாறு இருக்கும் என்று அவர் வாயோடு அடிக்கடி தொடர்புகொள்ளுகிற சங்கிற்குத் தெரிந்திருக்கவேண்டும். தனக்குக் கிடைக்காத இன்பம் இச்சங்கிற்குக் கிடைத்துவிட்.