பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 77 டும் என்ற விருப்பம் இவையிரண்டும் உண்மையானவை. இந்த உண்மை என்றும் நிலைக்கவேண்டும் என்ற விருப்பம் ஒரு கனவு கலந்த புறவுலக நிகழ்ச்சியின் உணர்ச்சிப் பெருக்கை நீடித்துக்கொள்ளும் உணர்வை ஒரு பாடல் வெளியிடுகிறது. இப்பாடல் முற்றிலும் கணவன்று. நிஜ இன்பத்தோடு தொடர் புடைய ஒரு புறப்பொருளைக் குறியீடாக்கி அதன் மூலம் தனது கனவுலக விருப்பத்தை, இவ்வுலக வாழ்க்கையில் நிறைவேற முடியாத ஒரு விருப்பத்தைக் காதலன் கவிதையில் நிறைவேற் றிக் கொள்கிறான். இது, புறவுலக உணர்ச்சிப் பதிவு. அக வுலகின் உணர்வில் கனவு மயமாகி, மீண்டும் பெருக்கெடுத்த உணர்ச்சியாக, இந்நிகழ்ச்சி பற்றிய ஆழ்ந்த உணர்ச்சிப் பதி வாக மாறுகிறது. பாடல் வருமாறு: ஆராக் காமம் ஆர்ப்பொழில் பாயல் வரையகத் தியக்கும் வரையா நுகர்ச்சி முடியா நுகர்ச்சி முற்றாக் காதல் அடியோர் மைந்தர் அகலத் தகலா அலர்ளுெமன், மகஅறி. நன்னர்ப் புணர்ச்சி புலரா மகிழ்மறப் பறியாது நல்கும் சிறப்பிற்றே தண்பரங் குன்று (பரிபாடல்-8; 40-48) தன் காதலனுபவத்தைத் தண்பரங்குன்றின் சூழலோடு சேர்த்து, நிலைத்ததோர் இன்பமாக்கிக்கொள்ளும் விருப்பம் இங்குக் காணப்படுகிறது. இல்வாழ்க்கை பற்றிய அவனது கனவு இங்கு மலர்கிறது. புலரா மன மகிழ் மறப்பறியாது’ என்று கனவுலக ஆசை தோன்றுகிறது. தண்பரங்குன்றின் சூழல், முடியா நுகர்ச்சி', 'முற்றாக்காதல் இவை யாவும் ஒன்றாகக் கரைந்து கவிதையமுதாக வெளிவருகிறது. இது உணர்வற்ற நிலையில் தோன்றும் விழி கனவு அல்ல. உணரும் உணர்வோடு, அதனை ஆழப்படுத்தும் மந்திரமயமான கனவுணர்வும் சேர்ந்து இன்ப நீடிப்பு விருப்பத்தை உருவாக்குகிறது. கனவு நிலையில் இன்பம் நீடிப்பதாகவே கவிஞன் உணருகிறான். கவிதையை ரசிப்பவர் கள் இக்கனவுலகில் சிறிது நேரம் ஆழ்ந்து உணர்ச்சிப் பெருக் கைப் பெறுவதாலேயே உலகத் துன்பத்தைச் சகித்துக்கொள் ளும் மனத்திண்மை பெறுகிறார்கள். இங்கு புறநிகழ்ச்சி, கவிதையுலகநிகழ்ச்சியாக மாறுவதைக் கீழ்வரும் குறியீட்டால் விளக்கலாம்: