பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 87 வித்தையை அவள் பாடல் செய்கிறது. இதில் 'ஹிப்னாடிக்" விளைவு ஏற்படுகிறது. ஒரு கொடியைத் தூக்கத் தாக்க ஒராயிரம் பாவக்காய் கட்டியிலிட்ட பாவக்காய் கட்டிதாளிக்க பாவக்காய் அரிக்கப் பொரிக்கச் சொல்லி அய்யன் தின்ன பாவக்காய் அப்படிக்கொத்த பாவக்காய் அரசு பணத்துக்கு மாத்துலாம் ஏலேலோ என்ற சொல்லை ஏற்றப் பாட்டில் பலமுறை பயன் படுத்தி இந்த விளைவைத் தோற்றுவிக்கலாம். ஆத்திலே ஏலேலோ ஊத்துப் பறிச்சு அத்தை மகன் ஏலேலோ இறைக்குந் தண்ணி அத்தனையும் ஏலேலோ உப்புத் தண்ணி என் பொறப்பு ஏலேலோ உறக்கம், விழிப்பு ஆகிய நிலைகளின் இடைநிலையான கஹறிப்னாடிக் நிலையை இவ்வுத்திகளால் நாட்டார் பாடகன் தோற்றுவிக்கிறான். இதுவே கவிதை தோன்றும் உணர்வு நிலை. இதனை இவ்வுத்திகளால் அல்லாமல் வேறு புதிய உத்தி களால் நவீனக் கவிஞன் தோற்றுவிக்க இயலும், இக் கனவுமயமான உலகில் பிறரைவிட அதிகமாகப் பழகி யவன் கலைஞன். உண்மை உலகின் முரண்பாடுகள் இக்கன வுலகில் தீர்வடைகின்றன. கனவுலகில் தீர்வு காணும் முரண் பாடுகள் உண்மை உலகில் திராமலே போகலாம். ஆயினும் அகவுலகம் மாறுதலுக்குள்ளாகிறது. கவிஞனது உள்ளத்தில் ஏற்படும் மாறுதல் மொழியோடு இணைந்து கவிதையாக வெளிப்படுகிறது. கவிஞனும் ரசிகனும் ஒரே புறவுலகில் தான் வாழ்கின்றனர். கவிஞனைப் போலவே அவன் மனத்தி லும் ஹிப்னாடிக் விளைவு ஏற்படுகிறது. ஆயினும் கவிஞன் தான் அதனை மொழியில் வெளியிடும் திறமை பெற்றிருக் கிறான். உணர்ச்சி மிக்க ஆர்வங்களை வெளியிட அவனுக்குத் திறமையும் மொழிப் பயிற்சியும் இல்லை. அவனது சொந்த ஆர்வங்களையோ, சமூக ஆர்வங்களையோ அவர்கள் வெளி