பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g 8 நா. வானமாமலை விட முடிவதில்லை. தங்களுடைய ஆர்வங்களையும் உணர்ச்சி களையும், தங்களைப் போலவே அவற்றை உணரும் கவிஞன் வெளியிடும்போது அவன் மனம் நெகிழ்கிறது. கவிஞன் வாழும் மந்திர வயமான கனவுலகில் அவனும் சிறிது நேரம் வாழ் சிறான். இவ்வாறு கவிஞனும் ரசிகனும் ஒரே மன நிலையில் புறவுலகிலிருந்து தோன்றி, வேறு உலகமாக மாறிவிட்ட கன வுலகில் ஒரே நேரத்தில் வாழ்கிறார்கள். பண்டைய மனிதன் சமூகத் தேவையான தனது விருப்பங் களை நிறைவேற்றிக்கொள்ள ஆடிப்பாடினான். சடங்குச் செயல்களைப் புரிந்தான். ஆனால் தற்கால மனிதன் இக்கன வுலகு அனுபவங்களை மொழியாலும் எழுத்தாலும் வெளியிடு கிறான். இந்த ஊடகத்தைப் பயின்ற ரசிகன், கவிஞனோடு அவனுடைய கவிதையுலகில் சஞ்சரிக்கிறான். வாய்மொழிப் பாடலில் புதுக் கனவுகள் உள்ளன. தனித் துவம் இல்லை. ஒருவனே பாடினாலும் குழுவின் உணர்ச்சியை வெளியிடுவதால், அப்பாடலைக் குழுவினர் ஏற்றுக்கொள்ளு கிறார்கள். புனைந்தவன் எவனானாலும், தங்களுடையது எனக் குழு கருதுகிறது. நாட்டுக் கவிஞனது மொழி சாதா ரனப் பேச்சு மொழி. இதை அவன் கனவுலக அனுபவத்தை வெளியிடப் பயன்படுத்தினான். தனது மொழியை உணர்ந்த வுடன் அவன் புனையும் சக்தியை இழந்துவிடுகிறான். பல நாட்டுக் கவிஞர்கள், ஏடறியேன், எழுத்தறியேன்” என்று கதைப் பாடல்களைத் துவங்குகிறார்கள். புதுப் புனைவும் கிலைபடுதலும் தற்காலக் கவிஞன் தனது ஊடகத்தைப் (மொழியை) பயின்றவன். இவன் நிஜவுலகத்தை அரைகுறைக் கனவுலகமாக மாற்றுகிறான். இந்த மாறுதலை, தான் பயின்ற மொழியால் வெளியிடுகிறான். இவன் கனவுலகில், நனவுலகைவிட்டு ஆழ்வ தில்லை. புறவுலக நிகழ்ச்சிகள் தோற்றுவிக்கும் அக உணர்ச்சி களை எழுத்தில் வடிக்கப் பயின்றுள்ளான். அதை ரசிக்கும் ரசிகன் கேட்போன்’ அல்ல, படிப்பவன். எழுத்தைப் பயன் படுத்துவதால் ஒரு கவிதையில் புதுப்புனைவு (innovation) செய்ய முடியாது. எழுத்து, உணர்ச்சி வெளியீட்டில் ஒரே உருவத்தில் நிலைப்படுத்துகிறது. எனவே நாட்டுக் கவிஞனைப் போல ஹிப்னாடிக் விளைவை ஏற்படுத்துவதற்குப் பதிலாக இவன் சிந்தனையை ஆழமான உணர்ச்சி வாய்க்கால் மூலம் செலுத்துகிறான். தற்காலக் கவிஞன் புறவுலகைத் தனது கல்வி மூலம் அறிந்தவன். அவனது உள்ளம், கவிதை, வரலாறு,